இலங்கை கால் பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்தின் உப தலைவர் என்.ரீ. பாறுாக் தெரிவு






காத்தான்குடி டீன் பைரூஸ்-

காத்தான்குடி சன்றைஸ் வி.கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர், கழகத்தின் உப தலைவரும் காத்தான்குடி கால் பந்தாட்டச் சங்கத்தின் தலைவருமான N.T.பாறூக் இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமணமானது கிழக்கு மாகாணத்திலிருந்து சுமார் 80 எண்பது ஆண்டுகளின் பின் தமிழ் பேசும் மக்களில் ஒருவருக்கு கிடைத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணம் அக்கறைப்பற்றினை பிறப்பிடமாகவும் காத்தான்குடியினை வசிப்பிடமாகவும் கொண்ட N.T.பாறூக் கால்பந்தாட்ட துறையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபாடு கொண்டவர் மாத்திரமின்றி பல விருதுகளையும் பெற்றிருப்பதுடன் , உள்நாடு வெளிநாடுகளிலும் பல கால்பந்தாட்ட போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட் சங்கத்தின் உருவாக்கம் மற்றும் அதன் வளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த N.T.பாறூக் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட மத்தியஸ்தர்கள் சங்கம் மற்றும் மத்தியஸ்தர்களின் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்த பெருமை N.T.பாறூகையே சாரும்.
அன்னாரை கெளரவிக்கும் நிழ்வு காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டினில்
அண்மையில் காத்தான்குடி கடற்கரை கடாபி பீச் பெளசில் இடம் பெற்றது நிகழ்வில் காத்தான்குடி நகர சபை செயலாளர் எஸ்.எம்.ஸபி,அமைச்சர் றவுப் ஹக்கீமின் இணைப்பபுச் செயலாளர் யு.எல்.என்.எம்.முபீன், சிரேஷட ஊடகவியாளர் ரீ.எல்.ஜவ்பர்கான், சன்றைஸ் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்த கொண்டனர். நிகழ்வு இராப் போசனத்துடன் நிறைவு பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -