வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றார் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம் சலீம்









பி.எம்.எம்.ஏ.காதர்-

லங்கையின் மூத்த ஊடகவியலாளர்களுள் ஒருவரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான நிந்தவூரைச் சேர்ந்த கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம், ஊடகத்துறையில் ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளமையை கௌரவித்து,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம்'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி பாராட்டி கௌரவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(2017-07-09)மாலை நிந்தவூர் பிரதேசசபை மண்டபத்தில் இந்த விழா நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட பதியதீன் கலந்து கொண்டார்.

சிறப்பு அத்தியாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா,விஷேட அதிதிகளாக முன்னாள் அமைச்சர்களான ஹசன் அலி,பஷீர் சேகு தாவூத்,அதிதிகளாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.ஜெமீல்,லக்சல நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.எம்.இஸ்மாயில்; அகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் யாழ் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு பிரேமானந்த,தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம்,வீரகேசரி செய்திப் பொறுப்பாசிரியர் ஸ்டீபன் உள்ளீட்ட ஊடகவியலாளர்கள்,பிரமுகர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சலீம் பற்றிய தகவல்களோடு ஊடகத்துறை மற்றும் அரசில் துறை சார்ந்தவர்களின்; வாழ்த்துச் செய்திகளுடன் ;' பொன் விழா காணும் ஏ.எல்.எம்.சலீம் ' என்ற பெயரில் 103 பக்கங்களைக் கொண்ட நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

மேலும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் அணிவித்து வாழ்த்துப் பேழை,சான்றிதழ்,பரிசுப் பொதி என்பன வழங்கி பொன்னாடைகள் போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -