மைத்திரி கேட்டதை ரணில் வழங்க முன்வரவேண்டும்- மனோ

னதிபதி கேட்டுக்கொண்டதைப் போன்று அவருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ்வரும் நிதி மோசடி விசாரணை பிரிவு, நீதி அமைச்சின் கீழ்வரும் சட்ட மா அதிபர் திணைக்களம் என்பவற்றை வழங்க ஐக்கிய தேசிய கட்சி தலைமை இணங்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நான் மூன்று மாத காலத்துக்குள் கடந்த ஆட்சியின் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்துகிறேன் என கடந்த அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவரும் ஏற்கனவே கூறியது போல், அவற்றைப் பயன்படுத்தி, கடந்த ஆட்சியின் குற்றவாளிகளை மூன்று மாத காலத்துக்குள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தான் எடுத்த அமைச்சை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளேன் எனவும், இதனால், தன்னிடமுள்ள அமைச்சு குறித்து குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் ஒன்றாகும் எனவும் ஜனாதிபதியின் இக்கருத்து குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -