எதிர்காலத்தில் மஹிந்தவை முஸ்லிம்கள் நிராகரிக்கவே முடியாது..!

லங்கை சுதத்திரம் அடைந்தபோது ஐ.தே.கட்சி என்ற ஒரே கட்சிதான் இருந்து வந்தது, பிறகு அந்த கட்சியிலிருந்து பிரிந்து வந்த எஸ்டபில்யூ பண்டாரநாயக்க அவர்களின் தலைமையில் ஸ்ரீ.ல.சு.கட்சியென்ற இன்னொரு கட்சி உருவாகியது.

அன்றிலிருந்து இலங்கையில் பலம்வாய்ந்த தேசிய கட்சிகளாக இந்த இருகட்சிகளும்தான் கோலோட்சி வருகின்றது என்பதை நாம் அறிவோம்.

இன்று அந்த நிலைமை மஹிந்த என்ற ஒரு தனிமனிதனால் மாற்றமடைந்து வருகின்றது என்கின்ற உண்மையை யாரும் அறியாது இருக்கமாட்டார்கள்.
காரணம் இலங்கையில் புறையோடிப்போயிருந்த பயங்கரவாத பிரச்சினையை உலகமே ஆச்சரியப்படும் அளவுக்கு முடிவுக்கு கொண்டுவந்த பெருமையின் காரணமாக, பெரும்பாண்மை சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் இன்று ஒரு கதாநாயகனாக பார்க்கப்படுகின்றார். கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அவருக்கென்று மக்கள் ஆதரவு பெருகிவருவதையும் நாம் அண்மைக்காலங்களில் கண்டுகொண்டுதான் வருகின்றோம்.

இதன் காரணமாக இன்று இலங்கையின் அரசியல் வரலாற்றில் நிராகரிக்கப்பட முடியாத ஒரு இடத்தில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் இருக்கின்றார்கள் என்பதை யாரும் இலேசாக தட்டிக்கழித்து விடவும் முடியாது.
அதன் காரணமாகத்தான் உரியநேரத்தில் நடத்தப்படவேண்டிய தேர்தல்களைக்கூட சாட்டுக்காரணங்களைக்கூறி இந்த நல்லரசாங்கம் நடத்த முடியாமல் தவிர்த்து வருகின்றது.


தேர்தல் ஒன்று நடந்தால் அடுத்த நிமிடமே நல்லாட்சியின் மதிப்பு எல்லோருக்கும் தெறிந்துவிடும் என்பதற்காகவே இந்தரசாங்கம் தேர்தல்களை தள்ளிப்போட்டு வருகின்றது. தேர்தல் நடந்தால் மஹிந்தவின் செல்வாக்கு கூடியிருக்கிறதா குறைந்திருக்கிறதா என்ற விடயம் தெறிந்துவிடும்.

இருந்தாலும் மஹிந்த என்பர் புலியை அடக்கிய விடயத்திலோ நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்சென்றார் என்றவிடயத்திலோ யாரும் அவரை குறைகாண முடியாது என்றிருந்தாலும், இறுதி யுத்தத்தில் அப்பாவி தமிழ் பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்ற விடயத்தில் ஒரு கரும்புள்ளி யொன்று அவர் மேல் குத்தப்பட்டுள்ளது என்ற விடயமும் உள்ளது என்பதும் உண்மையாகும்.

அந்த கலங்கத்தை போக்குவதற்காக யுத்தம் முடிவுற்றதன் பின் வடக்கின் வசந்தம் என்று கூறிக்கொண்டு பல கோடிகளை செலவு செய்தது மட்டுமல்ல, சரணடைந்த புலிப் போரளிகளுக்கும் புணர்வாழ்வு வழங்கி நல்ல பெயரை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றுவிடலாம் என்று அவர் முயற்சித்தாலும், அதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற விடயத்தையும் நாம் அறிந்திருந்தோம்.
*(இன்று நிலைமை மாறிவருகின்று என்பதை தமிழ் மக்களுடன் பழகுபவர்கள் அறிந்துகொள்ளலாம்).

அதே நேரம் சிங்கள இனவாதிகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பல பாதகசெயல்களை அவர் கண்டும் காணாதவர்போல் இருந்தார் என்பதிலும் உண்மைகள் இல்லாமலும் இல்லையெனலாம்.
அதன் காரணமாக அவர் ஆட்சியையும் பறிகொடுக்கும் அளவுக்கு நிலமை சென்றதையும் நாம் அறிவோம்.

என்னதான் இருந்தாலும் பெரும்பாண்மை சிங்கள மக்கள் அந்த தேர்தலில் 58லட்சம் வாக்குகளை அவருக்கு வழங்கியிருந்தார்கள், அந்த வாக்குகள் கட்சிக்கானதா ? அல்லது தனிமனித செல்வாக்குக்காக அளிக்கப்பட்ட வாக்குகளா ? என்ற வாதப்பிரதிவாதங்களும் அரசியல் ஆய்வாளர்களுக்கு மத்தியில் விவாதிக்கப்பட்டாலும், அந்த வாக்குகள் மஹிந்த என்ற தனிநபர் செல்வாக்காககத்தான் மாறியுள்ளது என்ற உண்மையை, அவர்கள் அண்மைக்காலங்களில் மஹிந்தவின் கூட்டங்களுக்கு மக்கள் அலையலையாக திரளுவதை கண்டு அறிந்து கொண்டு வருகின்றார்கள்.

இதன் காரணமாக இன்று மஹிந்த என்ற நாமம் இலங்கை அரசியல்வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாறிவிட்டது என்ற உண்மையை யாரும் மறுதளிக்க முடியாது. அவரும் அவருடைய கட்சியும் ஆட்சியமைக்க முடியாது விட்டாலும் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாகவேனும் எதிர்காலத்தில் வருவார்கள் என்பது சிறுபிள்ளைக்கும் தெறிந்த விடயமாக உள்ளது எனலாம்.

*(இந்த நேரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன என்ற கேள்வியும் எழுகின்றதை நாம் அவதானித்தால், மஹிந்த என்ற ஒரு மனிதனை ஒதுக்கிவிட்டு எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று முஸ்லிம்கள் நினைத்தால் அது முட்டாள்தனமான ஒரு செயல்பாடாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே கொள்ளத்தேவையில்லை எனலாம்).

இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக உள்ள முஸ்லிம்கள் மஹிந்த அணிபக்கம் செல்லமாட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, முஸ்லிம்களை வேண்டாத விருந்தாளிகளைப்போல் இந்தரசாங்கம் நடத்துவதை அண்மைக்காலங்களில் நடந்துவரும் இனவாத செயல்பாடுகளை வைத்து நாம் அறிந்துவருகின்றோம்.

ஆகவே இதற்கெல்லாம் ஒரு தீர்வை முஸ்லிம்சமூகம் காண்பதாகயிருந்தால், பலம்வாய்ந்த சக்தியாக இருக்கின்ற மஹிந்த அணியின் பக்கம் முஸ்லிம்கள் மாறியே ஆகவேண்டும்.
அப்படி மாறாது விதண்டாவாதமாக இருந்தோமேயானால் இதனை சாட்டாகவைத்து மற்ற கட்சிக்காரர்கள் எம்மை செல்லாக்காசாசாகத்தான் பயன்படுத்துவார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லையெனலாம்.

கடந்த காலங்களில் மஹிந்த இனவாதிகளை அடக்கத்தவறினார் என்ற விடயத்துக்கு அண்மைக்காலங்களாக அவர் முஸ்லிம் மக்களிடம் வருத்தம் தெறிவித்து வருகின்ற விடயத்தை நாம் கண்டுவருகின்றோம்.
அதே நேரம் இந்த இனவாதிகளை நான் அடக்கமுற்பட்ட போதெல்லாம் சம்பிக்க ரணவக்க போன்ற இனவாதிகள்தான் என்னைத் தடுத்தார்கள், அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்ற கேள்வியையும் முன்வைக்கின்றார். அந்த கேள்வியில் உண்மைகள் இல்லாமலும் இல்லை.

இப்போது மஹிந்தவை வீழ்த்துவதற்காக ரகசியமான முறையில் ஒன்றுசேர்ந்த கூட்டம்தான் முஸ்லிம்களையும் குழப்பி ஆதாயம் அடைந்தார்கள் என்றவிடயம் இப்போது தெளிவாகிவருகின்றது.
ஞானசார என்ற துறவி இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எந்த நிலையில் உள்ளார் என்ற விடயம் அண்மையில் அவருக்கு பிணைவழங்கப்பட்ட வேகத்தை கொண்டே புரிந்து கொள்ளலாம்.

நீதியை பாதுகாக்கின்ற பொலிசாரும், நீதிமன்றமும் அதனை வழிநடத்தும் அரசாங்கமும் ஞானசார விடயத்தில் எப்படி தலைகுணிந்து நிற்கின்றன என்ற விடயமும், இந்த நல்லாட்சி அரசாங்கம் எந்தளவுக்கு இனவாதிகளுக்கு துணைபோகின்றது என்ற விடயமும் வெளிச்சத்துக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றது.

ஆகவே, இந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயல்படவேண்டும். நாம் எதைத்தான் கதைத்தாலும் ஆட்சியில் அமறப்போகும் நபர் ஒரு சிங்களவராகத்தான் இருக்கப்பபோகின்றார், அதனால் ஆட்சியில் செல்வாக்குள்ள நபர்களை இனம்கண்டு அவர்களுக்கு வாக்களித்து அதன் மூலம் சில நண்மைகளை பெறுவது என்பதே புத்திசாலித்தனமாகும்.

மாறாக, அரசியல் ரீதியாக ஓரம்கட்டப்பட முடியாத மஹிந்த பக்கம் செல்லமாட்டோம் என்று அடம்பிடித்தால் பாதிக்கப்படபோவது நமது சமூகமே என்பதை நாம் புரிந்து கொள்ளாதவரை நமக்கு விடிவுகாலம் என்பது தூரத்தில்தான் உள்ளது என்பதுதான் உண்மையாகும்.

இன்று இந்த நல்லாட்சியை கொண்டுவர பின்னிலிருந்து முயற்ச்சித்த அமெரிக்கா இஸ்ரேல் நோர்வே போன்ற நாடுகள் இன்று சுதந்திரமாக இலங்கையில் உலா வருவதைப்பார்த்தால், இவர்கள் இலங்கை முஸ்லிம்களை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள் என்பது திண்ணம்.

அண்மையில் இலங்கையில் ஐ.எஸ் என்ற அமைப்பு இலங்கையில் ஊடுருவி விட்டதாகவும், அதனை பூரணமாக விசாரிக்க அமெரிக்க உளவுப்பிரிவு இலங்கை வரவிருப்பதாகவும் கூறுகின்றார்கள்.
இந்த நடவடிக்கைகள் நல்லரசாங்கத்தின் ஆசீர்வாதத்தோடு இலங்கை முஸ்லிம்களை நிம்மதியிழக்கச் செய்யும் செயல்பாடாகும்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதாக இருந்தால் முஸ்லிம் நாடுகளுடன் நெருங்கிய தொடர்வுகளை கொண்டுள்ளவரும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவு வழங்காதவரும், பலஸ்தீன மக்களின் அனுதாபியுமான மஹிந்த ராஜபக்சதான் வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -