தேர்தலை பிற்போட ஒரு போதும் தயார் இல்லை - தேர்தல் ஆணைக்குழு

தேர்தலை பிற்போட ஒரு போதும் தயார் இல்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட ஆலோசனை பிரிவின் பணிப்பாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டத்திட்டங்கள் குறித்து இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

1999ஆம் வடமேல் மாகாண சபை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.இதற்கு எதிராக சுயாதீன குழு நீதி மன்றத்தில் வழங்கு தாக்கல் செய்திருந்தபோது இரண்டு கிழமைகளில் தேர்தலை நடாத்துமாறு நீதி மன்றம் உத்தரவிட்டது.அதன்படி தேர்தலை நடாத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.


எனவே மாகாண சபை தேர்தல் பிற்போட முடியாது.மாகாண சபை தேர்தலை பிற்போட வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும்.

தேர்தல் குறித்து மக்களுக்கு சுதந்திரம் உள்ளது.
அதை நாம் தடுக்க முடியாது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட ஆலோசனை பிரிவின் பணிப்பாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -