பாடசாலையில் இடம்பெறற மோதல் தொடர்பில் விசாரணைக்குழு -அமைச்சர் ரமேஸ்







நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்- 

கொட்டகலை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் குழு நியமித்துள்ளதாகவும் விசாரணையின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம் ராமேஸ்வரன் தெரிவித்தார்

30.06.2017 இடம்பெற்ற குழு மோதலில் தாக்குதலுக்கு இழக்காகிய பொற்றோர் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆசிரியர் ஒருவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கடந்த 31 ம்திகதி குறித்த பாடசாலையின் காலைக்கூட்டத்திற்கு வருகைத்தராத சில மாணவிகளை ஆசிரியர் ஒருவர் தாக்கியமை தொடர்பில் பொற்றோர்களினால் 30.06.2017 காலை பாடசாலைக்கு விசாரிப்பதற்கு சென்றுள்ளனர் இச்சந்தர்ப்பத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் மாணவர்கள் பொற்றோர்களை தாக்கியதாகவும் பொற்றோர்களின் தாக்குதலில் ஆசிரியர் ஒருவரும் காயமுற்றுள்ளதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இழக்காகிய ஆசிரியர் ஒருவரும் பெற்றோர் ஒருவரும்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு பத்தனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்

சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கல்வித்திணைக்கள அதிகளும் பாடசலைக்கு உடனடியாக விஜயம் செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்
மேலும் இவ்வாறான தாக்குதல் சம்பவம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் நுவரெலியா பிரதேச பாடசாலையிலும் இடம்பெற்றுள்ளதால் விசாரணைக்குழுவின் அறிக்கையின் பின்னர் சம்பந்தப்படவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -