நாம் தூரமாகிவிட்டோம்?


நாம் இன்று சமூகமயமாக்களில் தனிமைப்பட்டவர்களானோம்.நாம் வாழ்கின்ற தேசத்தில் அடிமைகளாகி நமது சமூகவலைத் தளத்தில் இருந்து தூரமாகிவருகிறோம். நாம் பௌதீக,குடும்ப மற்றும் மதம்சார்ந்த கட்டமைப்பில் மிகவும் இறுக்கமான வரலாற்றப் பின்னனிக்குச் சொந்தக்காரர்கள்.

சமூகம்சார்ந்த நடமுறை விடயங்களில் நாம் பங்காளிகளாக இல்லாமல்,பார்வையாளராக மாறியுள்ளோம்.
சமூகத்தின் மத்தியஸ்தமாக விளங்கிய பள்ளிவாசல் பரிபாலனசபை முதல் பல இஸறலாமிய அமைப்புக்கள் மீது அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது.இவர்களால் மக்கள் மீது நம்பிக்கையை கட்டியெழுப்பும் எந்தவித ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் இடம்பெறுவதில்லை.

அரசியல் ரீதியாக பிளவுபட்டு தூரமாகி இருந்த சமூகத்தில் நாகரீக வளர்ச்சி ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தியது.இதன் மூலம் தனிமனித செரற்பாடுகள் ஓரளவு மக்கள்மயமானது.இருந்தும் நவீனகாலத்து மார்க்கத்தில் உண்டாகிய பிரிவினை மற்றும் கொள்கை வேறுபாடுகள் மீண்டும் சமூககட்டமைப்பை பலவீனமாக்கியது.இதன்காரணமாக சமூக ஒற்றுமை மற்றும் சகவாழ்விற்காக செயற்பட்ட இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் மார்க்க அமைப்புகள் அதே சமூகத்தின் தோல்விகளில் பங்காளியாகுவது கவலைக்குறியதாகும்.

உண்மையில் இஸ்லாம் தனிமனிதனுக்குள் காணப்படும் உணர்வுகள் (சந்ததியை பெருக்கும் உணர்வு (Procreational Instinct) சொத்துச் சேர்க்கும் உணர்வு (Accumulating wealth) ஆத்மீக உள்ளுணர்வு (religious instinct) மற்றும் பாதுகாப்பு உணர்வு (Protection) ) போன்ற உணர்வுகளையும் அதனை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய சிந்தனைகளையும் தனிமனிதனுக்குள் “குர்ஆன் சுன்னா அடிப்படையில்” ஒழுங்குபடுத்தும் வாழ்வொழுங்கை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தும் “ஒரு வாழ்க்கைச் சித்தாந்தம்” என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் உணரவேண்டும்.

"சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் ஊடாகவும் வரலாறு முன்னேறுகிறது,,-மாக்ஸிஸம் கூறுகிறது.

குடும்ப அரசியலை விமர்சிப்பதால் பலன் ஏதுமில்லை என்றாகிவிட்டது. ஏனெனில் குடும்ப பின்னனி இன்றி அரசியலில் அறிமுகமானவர்களால் மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.இறுதியில் மக்கள் மீண்டும் குடும்பவாரிசு தலைகளோடு சங்கமாக வேண்டியதாகிவிட்டது. ஆகவே புதிய மாற்றம் என்பது மக்களைவிட அதனை முன்னெடுப்பவர்களது போராட்டத்திலே தங்கியுள்ளது.

இன்று ஊரின் சகல அரசியல்வாதிகளின் அடிவருடிகளும்,அனுபவிப்பவர்களும் யார்?? சில குறிப்பிட்ட குடும்பங்கள் மட்டுமே வாரிசு அரசியலை தமக்கு மட்டும் சாதகமான குடும்ப அரசியலாக்கி சகல அரசியல்வாதிகளையும் கைபொம்மையாக்கி சுழற்சி முறையில் சூறையாதுவது மிகவும் கொடுமையானதாகும்.

இன்று அரசியல்வாதிகளை குருட்டத்தனமாக ஆதரிக்கும் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் தங்களது சுய இலாபம், மற்றைய தலைவர்களிடம் அதிகம் அனுபவித்தவர்கள்/அனுபவிக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள்/அனுபவிக்க சந்தர்ப்பம் காத்திருப்பவர்கள் மற்றும் சொந்தக்காலில் நிற்க முடியாதர்கள்.

ஆதலால் வாரிசு அரசியல் என்பதைவிட,சில குடும்பங்கள் மட்டும் சகல அரசரல்வாதிகளிடமும் சுழற்சி முறையில் அனுபவிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

சின்னமீனைப் பெரியமீனும், அதைப் பென்னாம் பெரிய மீனும் விழுங்கும் விலங்கின விதி இன்னும் செயற்படும் வகையில் சுரண்டல் அமைப்பு நீடிக்கிறது.

ஆகவே முற்போக்கு சிந்தனைகளை மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் சமூகத்தில் அதன் பிரதிபலிப்பை நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்த வேண்டும்.

தன்னைத்தானே உணர சுயவிளக்தை ஏற்படுத்தல்
யாதாத்த சூழலுக்கேற்ப இயைபாக்கம் காணல். நிகழ்காலஎதிர்கால நிலமைகளுக்கு ஏற்ப தன்னை இசைவுபடுத்திக் கொள்ளல்.
சுயதிறன்களை வெளிக்கொணர்ந்து அவற்றை முழுமையாக விருத்தி செய்தல் என்பன அவசியமாகும்.

தனக்கான தேவைகளை இயலுமானவரை சமூகத்தின் பெயரால் அடைந்து கொள்கின்றோம்.அதே விடயத்தை அடைந்து கொள்ளமுடியாதபோது சமூகத்தின் மீது பழிசுமத்துகிறோம்.ஆதலால் நமது சமூக உணர்வு நம்மை திருப்திப்படுத்தலுக்கு மட்டுமே மட்டுப்படுத்தும் சுயநலமாக மாற்றியுள்ளோம்.

ஆகவே மாற்றங்களோ,மாற்றுசிந்தனைகளோ இருக்கமான முரண்பாடு கொண்ட சமூகத்தில் நீண்ட போராட்டமே.அதற்காக நம்மீது சுமத்தப்பட்டுள்ள சமூகம்சார்ந்த கடமைகளில் செயற்பாட்டாளர்களாக இல்லாதபோதும் பங்களிப்பாளர்களாக இருப்பது அவசியமாகும்.

ஆகவே அரசியல் புற்றுநோய் சமூகத்தின் சகல மட்டங்களிலும் தாக்கத்தையும் பலவீனத்தையும் தோற்றுவித்துள்ளது.நமக்கான உரிமைகளையும் தேவைகளையும் அடைந்து கொள்வதற்கான மார்க்கமே அரசியல்.மாறாக நமக்கான சமூக கட்டமைப்பை சுயநலமிக்கதாகவும் அடிமைத்தனமாகவும் மாற்றிக் கொள்வதற்கல்ல.

ஆகவே முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுப்பவர்கள்/ எழுதுபவர்கள் விமர்சனங்களால் சேர்வடையக்கூடாது.ஏனெனில் நாமும் சாக்கடைக்குள் இறங்கியே துப்பரவு செய்ய வேண்டி உள்ளது.அழுக்குகளும்,அழுத்தங்களும் எங்களுக்கு பழக்கப்பட வேண்டியதே.

ஆழ்வதும் அனுபவிப்பதும் ஒருகூட்டம்.
ஏங்குவதும் ஏமாற்றப்படுவதும் முழுசமூகமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -