நல்லாட்சி அரசிற்கு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டிய தார்மீக கடமை உண்டு

எம்.எம்.ஜபீர்-

முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவரை கிழக்கு மாகாணத்திற்கோ அல்லது வேறொரு மாகாணத்திற்கோ ஆளுனராகநியமிக்க வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் நல்லாட்சி அரசிற்கு உண்டு. இதனை நிறைவேற்ற முஸ்லிம்கட்சி தலைமைகளும், முஸ்லிம் சமூக அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு கல்முனை பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும், பளீல் பௌண்டேசன் சமூகசேவை அமைப்பின் தலைவருமான ஏ.அப்துல் கபூர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர், கடந்த கால ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாஸ, சந்திரிக்காபண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் ஒன்பதுமாகாணங்களிற்கும் ஏழு பேர்கள் பெரும்பான்மையை சேர்ந்தவர்களும், இரண்டு மாகாணங்களுக்கு சிறுபான்மைசமூகத்தை சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழர்களும் நியமிக்கப்பட்டனர்.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபாலசிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக 98 சதவிகிதம் வாக்களித்து வெற்றியடையச் செய்தார்கள். இதன்மூலமாக முஸ்லிம் சமூகம் கண்ட கனவுகள் எதுவும் நிறைவேறவில்லை. தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்குவந்தவுடன் இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் எட்டு மாகாணங்களுக்கு பெரும்பான்மை சமூகத்தைசேர்ந்தவர்களையும் ஒரு மாகாணத்திற்கு தமிழ் சமூகத்தை சேர்ந்த ஒருவரையும் ஆளுனர்களாக நியமித்தார்.

இதில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் ஒருவர்கூட நியமிக்கப்படாது புறக்கணிக்கப்பட்டமை இன்னும் முஸ்லிம்சமூகத்தின் மத்தியில் நிறுபூத்த நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் போது வெற்றிடம் ஏற்பட்டுள்ள கிழக்குமாகாணத்திற்கு அல்லது வேறொரு மாகாணத்திற்காவது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஆளுனராகநியமிக்க நல்லாட்சி அரசாங்கம் அக்கறை காட்டாமல் இருப்பது கவலையளிக்கின்றது.

வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அரச சார்பான மற்றும் அரச சார்பற்ற ஆணைக்குழுக்களுக்கமானஉறுப்பினர்களை நியமனம் செய்யும் அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தை பற்றி கருத்தில் எடுக்காது நீதியாக நடந்துகொள்வதாக தெரியவில்லை. அரசாங்கம் இவ்வாறான புறக்கணிப்புக்களை முஸ்லிம் சமூகத்தின்மீதுமேற்கொள்ளும் போது முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் சமூக அமைப்புக்களும் கைகட்டி வாய்பொத்திபார்த்துக்கொண்டிருக்க முடியாது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் இந்த சந்தர்ப்பத்தில் ஆட்சி அதிகாரங்கள் சகல சமூகங்களிற்கும் சமமாகபகிர்ந்தளிக்கப்படலாம் என எதிர்பார்த்திருக்கும் இக்கால கட்டத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் இருகண்களானஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர்கள் முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் நீதிநியாயமாக நடந்து கொள்ளவேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -