

எம்.வை.அமீர் –
தேவையுடைய அதிக மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையான சாய்ந்தமருது றியாளுல்ஜன்னா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு அப்பாடசாலையின் அதிபர் எம்.ஐ.சம்சுடீன் 2017-07-09 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் லங்கா அசோக் லேலண்ட்டின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டதுடன் இன்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் உமேஷ் கெளதம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டார்.
கல்முனையின் முதல்வராக கடமையாற்றிய காலப்பகுதியில் தனது தூய சேவையின் ஊடாக மக்களின் மனங்களில் தனக்கென சிறந்த இடத்தைப் பெற்றுக்கொண்ட கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கிழக்குமாகாண வரலாற்றில் பாரிய நிறுவனம் ஒன்றை அறிமுகம் செய்து, தலைநகருக்குச் சென்று காலத்தை வீணடிப்பதை தவிர்க்கும் நோக்கில் லங்கா அசோக் லேலண்ட்டின் உத்தியோகபூர்வ முகவர் நிலையம் ஒன்றைத் திறந்துவைக்கும் நிகழ்வுக்கு முன்பாகவே, குறித்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இங்கு கருத்துத்தெரிவித்த கலாநிதி சிராஸ், பிரதேசத்தில் கல்வியில் காட்டப்படும் முன்னேற்றமே பிரதேசத்தின் அபிவிருத்தி என்றும், அதற்காக ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்புக்களை செய்ய வேண்டும் என்றும், தான் கடந்தகாலங்களில் மாணவர்களை ஊக்குவிக்கும் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்துள்ளதாகவும் எதிர்காலத்திலும் அவ்வாறான பணிகளில் ஈடுபடுவதாகவும் உறுதியளித்தார்.
லங்கா அசோக் லேலண்ட் நிருவதத்தின் ஊடாகவும் இப்பிரத்திய மாணவர்களின் தேவைகளுக்கு உதவ முடியுமானவரையும் உதவுவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது லங்கா அசோக் லேலண்ட்டின் பணிப்பாளர்கள், சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை, சாய்ந்தமருது கோட்ட கல்வி அதிகாரி ரஹுமான் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் மாணவர்கள் மற்றும் கலாநிதி சிராஸின் பிரத்தியோக இணைப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.