காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகள் மக்களிடம் கையளிப்பு.!

காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் மற்றும் பல்சிகிச்சைப் பிரிவு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விஷேட வைத்திய நிபுணர் விடுதி என்பன இன்று (13.07.2017 / வியாழக்கிழமை) காலை கிழக்குமாகாண கௌரவ முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.

கிழக்குமாகாணசபை கௌரவ உறுப்பினர் ஷிப்லி பாரூக் அவர்களின் கோரிக்கைக்கமைவாக கௌரவ முதலமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 18 மில்லியன் ரூபா செலவில் இவ்விரண்டு வேலைத்திட்டங்களும் நிறைவுசெய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் கௌரவ முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களுடன் சுகாதார அமைச்சர் கௌரவ ALM.நசீர், மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் உட்பட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகளும் , பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -