ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியில் முஸ்லிம்கள் சிக்கிவிட்டதாக பாகிஸ்தான் உயர்மட்டம் கவலை வெளியிட்டது

டக்கு கிழக்கில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பயங்கரவாதிகளால் கொன்று குவிக்கப்பட்டதை நாம் முற்றாக நிறுத்தியபோது எம்மை பாராட்டாதவர்கள் அலுத்கமையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வினை மையமாக வைத்து எம்மை பலவீனப்படுத்தினார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

நேற்று இரவு அவரை சந்தித்த முஸ்லிம்களிடம் அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர் ..

எம்மிடம் இருந்து ஆட்சியை பறிக்க மேற்குலம் செய்த சதியில் இந்த நாட்டு முஸ்லிகள் மாட்டிக்கொண்டனர்.அதை இப்போது அவர்கள் உணருகின்றனர்.என்னை நோக்கி தற்போது படையெடுக்கும் முஸ்லிம்கள் மூலம் நான் இதனை அறிந்துகொள்கிறேன்.இந்த நாடு தற்போது மேற்குலகத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் தீவிரமாக சென்றுவிட்டது.

அன்று மூதூரில்,கிண்ணியாவில் காத்தாங்குடியில், முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் விடுதலை புலிகளால் கொலைசெய்யப்பட்டனர்.முஸ்லிம்கள் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டபோது நாம் அதை தடுத்து நிறுத்தினோம்.எமது அர்பணிப்ப்பு காரணமாக உந்தும் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் சுதந்திர காற்றை சுவாசி சுவாசிக்கின்றனர்.அதற்காக எம்மை பாராட்டாதவர்கள் அலுத்கமையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வினை மையமாக வைத்து எம்மை பலவீனப்படுத்தினார்கள்.

முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்க நடந்த சதி தொடர்பில் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு அப்போது அறிந்துகொண்டதாகவும் அவர்கள் அது தொடர்பில் அறிந்துகொண்டு எம்மிடம் கூறும் போது விடயம் கை மீறி சென்றுவிட்டதாகவும், முஸ்லிம் மக்கள் பாரிய அளவில் எம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும்,எமது பக்க நியாயத்தை ஏற்கும் பக்குவத்தில் அவர்கள் அப்போது இருக்கவில்லை எனவும் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவின் பிரதாணிகள் அண்மையில் தான் பாகிஸ்தான் விஜயம் செய்தபோது தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

தற்போது மேற்குலகின் சதிக்குள் இலங்கை சிக்கிவிட்டதாகவும் அதிலிருந்து மீளும் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தேவையான சகல உதவிகளையும் செய்யும் என தன்னிடம் பாகிஸ்தான் உயர் தரப்பு குறிப்பிட்டதாக மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -