விரைவில் இந்த விசாரணை நடத்தப்படும் என்று மாகாணக் கல்வி அமைச்சு வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தகுதியற்ற தொண்டர்களுக்கு உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர்களுக்கும் அதனை உறுதிப்படுத்திய வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கும் எதிராக உரிய நடைமுறைகளின் பிரகாரம் திணைக்கள ரீதியிலான விசாரணை நடத்தப்படவுள்ளது.
நியமனம் வழங்கலில் உள்ள விதிமுறைகளில் தொண்டராசிரியர்கள் 2011 டிசெம்பர் முதலாம் திகதிக்கு முன்பிருந்து தொடர்ச்சியாகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுண்டு. ஆனால் பலர் 2011 ஆம் ஆண்டிலேயே உயர்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாகவும் மேலும் சிலர் இரண்டாவது தடவையாகவும் தோற்றியுள்ளனர். அவ்வாறிருந்தும் பாடசாலைகளின் அதிபர்கள் உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று குறிப்பிடப்பட்டள்ளது.
குறிப்பு- இவ்வாறான நியமனங்கள் தத்தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணாக சீரழிக்கும்.இப்படி தெரிவு செய்யப்படும் ஆசிரியர்கள் சம்பளத்தை மாத்திரம் எடுத்து விட்டு எமது மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை சிதைப்பர் என்பது திண்ணம்.இதனை பல அரசியல்வாதிகள் இன்னும் விளங்குறார்கள் இல்லை.ஊடகங்கள் மூலமாக நாம் அழுத்தங்களை கொண்டு வர வேண்டும் என இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது.சும்மா வீட்டில் நின்ற அநேகமான பெண்கள் தொழிலுக்காக ஆயிரக்கணக்கான பணத்தை கொடுத்து இவ்வாறு உறுதிக்கடிதத்தை பெற்றுள்ளனர்.அல்லாஹ் போதுமானவன் இந்த செயற்பாடு புனித நோன்பு காலத்தில் நடந்து உள்ளமை மிக கேவலமானது.
