சம்பந்தன் ஐயாவை காப்பாற்றவேண்டிய நிலையில் மைத்திரி அரசு !

ந்த நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற சம்பந்தன் ஐயா அவர்கள் மைத்திரி அரசாங்கத்தின் எதிர்க்கட்சி பதவியை, மஹிந்த சார்பான கூட்டு எதிரணி கைப்பற்றி விடாமல் தடுக்கும் ஒரு கேடயமாகவே பயன்படுத்தி வருகின்றார்.

தங்களுடைய நோக்கம் இந்த நல்லரசாங்கத்தினூடாக நிறைவேறுகின்றதோ இல்லையோ, ஆனால் தாங்கள் கொண்டுவந்த நல்லரசாங்கம் சுகமாக இருக்கவேண்டும் என்பதில் சம்பந்தன் ஐயா அவர்களும் அவருடைய கூட்டுக் கட்சியினரும் ஆர்வம் காட்டிவருவதையும் நாம் அவதானித்து வருகின்றோம்.

இந்த நிலையில், வடமாகாண முதலமைச்சர் விக்ணேஸ்வரன் ஐயா அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைக் கண்டு விக்கி ஐயா அவர்கள் அதிர்ச்சியடைந்தாரோ இல்லையோ, ஆனால் மைத்திரி அரசாங்கம் குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரி அவர்கள்தான் ஆடிப்போய்விட்டார் என்பதே உண்மையாகும்.

விக்கி ஐயா அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா ப் பிரேரணையை ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களிடம் ஒப்படைத்தபோது ஆளுநர் அவர்கள் இது விடயமாக முடிவெடுப்தற்கு ஜனாதிபதி மைத்திரி அவர்களின் கவணத்துக்கு கொண்டுவந்திருந்தார், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரி அவர்கள் பச்சைக் கொடி காட்டியிருக்கவில்லை.

காரணம்... முதலமைச்சர் விக்ணேஸ்வரன் ஐயா அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஊழலை எதிர்க்கின்ற ஆட்சிக்கு எதிராக செயல்படும் அரசாங்கம் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகவேண்டிவரும் என்ற என்னமும்,

அதேநேரம் விக்ணேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுத்தால் அரசாங்கத்தை முட்டுக்கொடுத்து காப்பாற்ற உதவி செய்துவரும் சம்பந்தன் ஐயாவின் ஆதரவை இழக்கவேண்டி வரலாம் என்ற என்னமுமாகும்.

அதுபோக, விக்கி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுற்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோ, ஈபிஆர்எல்எப், புளோட் ஆகிய மூன்று கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் தனித்து இயங்குவோம் என்ற எச்சரிக்கையும் அரசாங்கத்தை கதிகலங்க வைத்த விடயங்களில் ஒன்றாகும்.

பாராளுமன்றத்தில் இவர்கள் தனித்து இயங்கத் துவங்கினால் சம்பந்தன் ஐயா அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு தகுதியில்லாதவராக ஆகிவிடுவார். அதன் காரணமாக மஹிந்த அணியினர் எதிர்க்கட்சி என்ற பதவியை பிடிப்பதற்கு அது காரணமாக அமைந்துவிடவும் கூடும்.
அப்படி எதிர்க்கட்சி பதவியை மஹிந்த அணி கைப்பற்றினால் நல்லாட்சி அரசாங்கம் மேலும் பல சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியும் வரலாம்.

மஹிந்த அணியினருக்கு பயந்துதான் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தமுடியாமல் தவிக்கும் இந்த நல்லரசாங்கம். எதிர்க்கட்சி பதவியும் மஹிந்த அணிக்கு சென்றுவிட்டால் எதிர்வரும் மாகாணசபை தேர்தலையும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களையும் சந்திப்பதற்கு மிகவும் கஷ்டப்படவேண்டிய நிலையேற்படலாம்.
அப்படியொரு நிலை ஏற்படுவதை ஜனாதிபதி மைத்திரி அவர்கள் கடைசிவரையும் விரும்பமாட்டார். அதனால் எதிர்கட்சியில் சம்பந்தன் ஐயா அவர்கள் தொடர்ந்து நீடிப்பதையே தங்களுக்கான பாதுகாப்பு என்று மைத்திரி அரசாங்கம் விரும்புகின்றது என்பதே உண்மையாகும்.

இதன் காரணமாகவே, விக்ணேஸ்வரன் ஐயா அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அரசாங்கம் தர்மசங்கடத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில் மைத்திரி அரசாங்கம் மிகவும் கவணமாக காய்நகர்த்துகின்றது என்றவிடயம் புலனாகின்றது என்பதை நாம் அவதானிக்கலாம்.

ஆகவே, என்னதான் நல்லாட்சியென்று கூறிக்கொண்டாலும் அதனை பாதுகாக்கும் தூணாக சம்பந்தன் ஐயா அவர்களின் கட்சிதான் இருந்துவருகின்றது என்பதை யாராலும் மறுதலிக்கமுடியாது என்பதே உண்மையும் யாதார்த்தமுமாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -