நட்பு நாடுகளின் கோரிக்கை நடைமுறைக்கு ஒத்துவராது -கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர்

வுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து உள்ளிட்ட நட்பு நாடுகளின் கோரிக்கையை நிராகரித்த கத்தார் மீது நான்கு நாடுகளும் கோபத்தில் உள்ளது.



கைரோ:

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த மாதம் (ஜூன்) 5-ம் தேதி முதல் முறித்துக்கொண்டன. தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பணஉதவி செய்வதாகவும், எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி கத்தாருக்கு இந்த தடை விதிக்கப்பட்டது.

மேலும் கத்தாரில் இருந்து மேற்கண்ட நாடுகளின் தூதர்களும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பப் பெறப்பட்டனர். மேலும் கத்தார் விமானங்கள் அந்தந்த நாட்டின் வான் எல்லையில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் கத்தார் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.



இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சவுதி அரேபியாவும், அதன் நட்பு நாடுகளும் கத்தாருக்கு 13 கோரிக்கைகளை முன்வைத்தன. அதற்காக குறிப்பிட்ட நாட்கள் கெடுவும் விதிக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த கத்தார் அனைத்து நாடுகளையும் புறக்கணித்தது.

சவுதி அரேபியா, எகிப்து, அரபு நாடுகள், மற்றும் பக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்புக்கு பின்னர், கோரிக்கைகளை நிராகரித்த கத்தாரின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணராமல் தவறான முடிவை கத்தார் எடுத்திருப்பதாக தோகா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நட்பு நாடுகளின் கோரிக்கை நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக இருக்கிறது. இது தீவிரவாதம் தொடர்பானது அல்ல. பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக இருக்கிறது என்று கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் மொகமது பின் அப்துல்ரகுமான் அல்-தானி கூறியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -