O/L பரீட்சை தரம் பத்தில் - பாடசாலை காலம் ஒரு வருடத்தால் குறைப்பு..?

பாடசாலை கல்விக் கால எல்லையை ஒரு வருட காலத்தினால் குறைப்பதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது. அதற்கிணங்க க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையை தரம் பத்திலும் உயர்தரப் பரீட்சையை தரம் பன்னிரெண்டிலும் நடத்துவதற்கு அவ்வாணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

மேலும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பப்பிரிவாகவும் தற்போது தரம் ஆறு முதல் தரம் ஒன்பது வரை வரையறுக்கப்பட்டுள்ள கனிஷ்ட பிரிவை தரம் ஆறு முதல் தரம் எட்டு வரை வரையறுப்பதற்கும் அவ்வாணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. மேலும் தரம் ஒன்பது முதல் தரம் பன்னிரெண்டு வரையிலான நான்காண்டு கல்வி நடடிக்கைகளை சிரேஷ்ட பிரிவுகளாகவும் வரையறுப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் நான்கு வயது பூர்த்தியடைந்த பிள்ளைகளை அரசாங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளில் அனுமதிக்க வேண்டியுள்ளதுடன் அம்முன்பள்ளிகள் அனைத்திலும் ஒரே பாடத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

சாதாரண கல்வி தொடர்பில் தேசிய கல்வி ஆணைக்குழு முன்வைத்துள்ள கொள்ளைகைத்திட்டத்திலேயே மேற்குறிப்பிட்ட யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த யோசனைகள் அடங்கிய திட்ட வரைபு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடமும் கையளிக்கப்பட்டுள்ளன. நன்றி வீரகேசரி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -