மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 1 கோடி 40 இலட்சம் ரூபா நிதி ஓதுக்கீட்டில் 211 நலன்புரி சங்கங்களுக்கு நலன்புரி கூடாரங்கள் மற்றும் கதிரைகள் கையளிக்கும் நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் நேற்று (30-07-2017) நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில்; நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மாகாணசபை உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன், சிங் பொன்னையா மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொது செயலாளர் லோரன்ஸ் உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.