பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்தரம்) யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிலக்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தினமான இன்று (01) நடைபெற்றது. மாலை 03.30 மணியளவில் யாழப்பாணம் பிரதான வீதியிலுள்ள (நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில்) ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் மாலை அணிவித்து மலரஞ்சலியும் சுடறேற்றலும் நடைபெற்றது. பின்னர் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் கலையரங்கில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றன.
அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் நிலக்சனின் உருவப்படத்திற்கு அவனது குடும்பத்தினர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நிகழ்வில் பங்பேற்றவர்கள் சுரரேற்றி அஞ்சலித்தனர். தொடர்ந்து நிலக்சனின் பெற்றோர் பொதுச் சுடர் ஏற்றினர். வரவேற்புரையைத் தொடர்ந்து தலைமையுரை கவிதாஞ்சலி என்பன இடம்பெற்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் சிறந்த பெறுபேறு பெற்று பட்டம்பெறும் ஊடகத்துறை மாணவனுக்கான சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் - அறிமுக நிகழ்வு நடைபெற்றது. நிலக்சனின் கல்லூரிக்கால நண்பர்களால் உருவாக்கப்பட்ட தங்கப்பதக்க அறிவிப்பை நிலக்சனின் பெற்றோர் வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கலாநிதி மு.சுதாகர் அதனைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து ஓய்வுநிலை அதிபர் அ. பஞ்சலிங்கம், மக்கள் வங்கி, யாழ்ப்பாணம் முகாமையாளர், ஆ. சத்தியமூர்த்தி மற்றும் ஊடகவியலாளர் ஊடக வளவாளர் ஜனகேஸ்வரன் ஆகியோரின் நினைவுரைகள் நடைபெற்றன. நிகழ்வின் இறுதியாக தற்கால சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவரையாளரும்ம ஊடக கற்கைகள் அலகு இணைப்பாளருமான கலாநிதி எஸ்.ரகுராம் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.