கேரளாவில் 1,000 பேர் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளனர் - மோடி அரசு விசாரணை

'கேரள மாநிலம், மலப்புரத்தில், மத மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணை அறிக்கையை, அம்மாநில அரசு சமர்ப்பிக்கவில்லை,'' என, மத்திய உள்துறை இணையமைச்சர், ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரும், பா.ஜ.வைச் சேர்ந்தவருமான, ஹன்ஸ்ராஜ் அஹிர், தெலுங்கானா தலைநகர், ஐதராபாத்தில் நேற்று (19 -08 -2017 ) கூறியதாவது: 

கேரளாவில், முதல்வர்பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, மலப்புரம் மாவட்டம், மத மாற்ற மையமாக திகழ்கிறது. ஒரு மாதத்தில், 1,000 பேர், மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. சமீபத்தில், மலப்புரம் சென்றேன்; அப்போது, மாவட்ட உயரதிகாரி, தலைமை செயலர் ஆகியோருடன், மத மாற்ற விவகாரம் பற்றி பேசினேன். மலப்புரத்தில் நடக்கும் மத மாற்றம் குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, கேரள அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.

இதுவரை, கேரள அரசு அறிக்கை சமர்ப்பிக்க வில்லை. மத மாற்ற விவகாரம் குறித்து விசாரிக்கும்படி, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணையில், உண்மை அம்பலமாகும்.'' இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -