நோட்டன் பிரிட்ஜ் இராமச்சந்திரன்-
பத்து அடி உயரத்திற்கு கோவா செடியொன்று அட்டன் குடாகம பிரதேசத்தில் வளர்ந்துள்ளது. அதிசயிக்கும் வகையில் வளர்ந்திருக்கும் இலை கோவா செடியானது 6 மாத காலத்தில் இவ்வாறு உயரமாக வளர்ந்துள்ளதாக வீட்டுத்தோட்டத்தின் உரிமையாளர் குமாரி திசாநாயக தெரிவித்தார்.
சமைப்பதற்காக நுவரெலியாவிலிருந்து கொண்டு வந்த இலை கோவாவின் ஒரு கிளையை வீட்டுத்தோட்டத்தில் நாட்டி வைத்து பசுவின் சானம் உரமாக இட்டு வளர்த்த இந்த கோவா செடியிலிருந்து கிடைக்கும் இலை கோவாவை வீட்டு சமையலுக்கும் அயலவர்களுக்கும் வழங்குவதுடன் இலை கோவா 1 கிலோகிராம் 45 ரூபாய் விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.