தவறான உறவில் இருக்கிறீர்களா..? 10 அறிகுறிகள்

ண்டதும் காதல் கூட வரலாம். ஆனால், கட்டாயத்தின் பேரில், அல்லது என் நண்பர்கள் அனைவரும் காதல் உறவில் இருக்கிறார்கள் என்று ஓர் பெண்ணையோ, ஆணையோ காதலிக்க தொடங்குவது முழுமையான முட்டாள்தனம். காதல் என்பது விதையில் இருந்து பிறக்க வேண்டிய மலரே தவிர, ரோட்டில் கண்ட செடியில் இருந்து பிடுங்கி வைத்துக் கொள்ள வேண்டியது அல்ல.

எனவே, நீங்கள் இருக்கும் காதல் உறவு சரியானதா, தவறானதா, நீங்கள் உண்மையிலேயே காதல் உறவில் தான் இருக்கிறீர்களா? அல்லது ஊரை ஏமாற்ற உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறீர்களா என்று முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்…

சண்டை
எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது!! உறவுகளுக்குள் சண்டையே வராமல் இருக்க வாய்புகள் இல்லை. ஆனால், பேசும் போதெல்லாம் சண்டை வருவது. ஒருவர் செய்வது மற்றொருவருக்கு ஒட்டுமொத்தமாக பிடிக்கமால் போவது போன்றவை, நீங்கள் தவறான நபரோடு உறவில் இருக்கிறீர்கள் என்பதற்கான முதல் அறிகுறி.

ஒன்றாக வெளியே செல்ல மறுப்பது
எப்போது அழைத்தாலும் உங்களோடு வெளியே வர மறுப்பு தெரிவிப்பது. ஒருசிலர் காதலிக்கும் போது வீட்டிற்கு தெரியாமல் வெளியே வர மறுப்பார்கள். ஆனால், மற்றவர்களோடு வெளியே செல்லும் அவர்கள் உங்களோடு மட்டும் வெளிவர மறுப்பது இரண்டாம் அறிகுறி.


நண்பர்களுக்கு பிடிக்காமல் போவது

சிலர் இதை தவறாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், உங்களுக்கு இணையாக, உங்களுக்கு யார் சிறந்த துணை என்பதை தேர்வு செய்யும் திறன் உங்கள் நண்பர்களுக்கும் உண்டு. உங்களோடு 24 மணிநேரமும் ஒன்றாக இருக்கும் அவர்களுக்கு, யார் உங்களுக்கு சிறந்த ஜோடி என அறியும் திறன் நன்றாகவே இருக்கும். எனவே, உங்கள் நண்பர்களுக்கு பிடிக்கிறதா, இல்லையா என்பதை வைத்துக் கூட இதை கண்டறிய முடியும்.

துணையின் நண்பர்கள்

எப்படி உங்கள் நண்பர்களால் அறிய முடியுமோ, அதே போல உங்களது நண்பர்களை வைத்தே உங்களை பற்றியும் கண்டறிய முடியும். ஆம், நீங்கள் உறவில் இருக்கும் நபரின் நண்பர்களை வைத்தே அவர் உங்களுக்கு சரியான துணையா இல்லையா என்பதை கண்டறிய முடியும்.

உங்களையே மறப்பது

அவர்கள் இல்லாத நாள் உங்களுக்கு விசேஷமாகக் இருக்கிறது எனில், கண்டிப்பாக நீங்கள் தேர்வு செய்திருக்கும் நபர் உங்களுக்கு ஏற்ற நபர் இல்லை என்பது தான் உண்மை.

குறைத்து மதிப்பிடுவது

உங்களை எப்போதுமே அவர்களை விட சிறியவர் என்பது போல மதிப்பிடும் நபராக அவர் இருக்கிறார் என்றால், நீங்கள் தவறான நபருடன் உறவில் இருக்கிறீர்கள் என்று தான் பொருள்.

கசப்பான உணர்வு

அவருடன் உறவில் இருக்கும் போது கோபமாக அல்லது கசப்பான உணர்வு அதிகரிக்கிறது என்பது நீங்கள் தவறான நபரோடு உறவில் இருக்கிறீர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்யும் அறிகுறி.

நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பது

உங்களுக்கு அவர் மீதோ, அவருக்கு உங்கள் மீதோ நம்பிக்கை குறைந்து காணப்படுவது. இவ்வாறான நிலை ஏற்படுகிறது எனில், நீங்கள் ஒரு பேச்சுக்காக தான் உறவில் இருப்பது போல நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களை மாற்ற நினைப்பது
எப்போதுமே, நீ இப்படி மாறினால் நன்றாக இருக்கும், அப்படி மாறினால் நன்றாக இருக்கும் என்று கூறுவது. நீங்கள் நீங்களாக இருக்கும் போது வராத காதல் உங்களுக்கானது அல்ல என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

விருப்பம் இல்லாதது
கனவில் கூட அவரோடு எதிர்காலத்தை நினைத்து பாராமல் இருப்பது, விருப்பம் குறைந்துக் கொண்டே வருவது போன்றவை நீங்கள் எப்போதோ அந்த உறவில் இருந்து வெளி வந்திருக்க வேண்டும் என்பதற்கான அறிகுறி.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -