பேருவளையில் நேற்று முந்தினம் இடம்பெற்ற மக்கள் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதனைகுறிப்பிட்டார்.
அங்கு தொடந்து உரையாற்றிய அவர்...
தற்போதைய அரசாங்கமானது மக்களுக்கு சொல்லொண்ணா துயரங்களை அடுக்கடுக்காக வழங்கிவருகிறது.அந்த வகையில் எது எதற்கோ ஏதேதோ செய்த இவ்வரசானது மதஸ்தளங்களிலும் தனது கையைவைத்துள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வரி திருத்த சட்டமூலத்தில் மத ஸ்தானங்களுக்கும்அரசு கைவைத்துள்ளது.
புதிய வரி சட்டமூலத்திற்கு அமைவாக மதஸ்தலங்களுக்கு 3 வீத வரியும், மதஸ்தளங்களினால் இயக்கப்படும்நிறுவனங்களுக்கு 14 வீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மதஸ்தலங்கள் மக்களினால் வழங்கப்படுகின்ற அன்பளிப்புக்களை வைத்தே இயக்கப்படும். மதஸ்தலங்களின் நிதி தொடர்பான தேவைகளுக்கு அரசானது உதவி செய்வதே பொருத்தமானது. உதவி செய்யா விட்டாலும் பறவாயில்லை அவற்றை எடுத்து உபத்திரம் செய்யாமலாவது இருக்கலாம்.
மதஸ்தளங்கள், தனதுசெயற்பாடுகளுக்கு ஏதாவதொரு நிறுவனத்தை இயக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்.அவற்றுக்கெல்லாம் வரிவிதிப்பதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கதொரு செயற்பாடாகும்.இது தவிர புதிய வரி சட்டமூலத்தில்வெளிநாடுகளுக்கு வர்த்தக நோக்கில் இங்கிருந்து கொண்டு செல்லும் மாணிக்கக் கற்களுக்கான வரியை 0.5 % வீதத்தில் இலிருந்து 14 % வீதமாக்கியுள்ளது.இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு மாணிக்க கற்களை ஏற்றுமதிசெய்யும் மாணிக்க வர்த்தகர்கள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளது.
மாணிக்கக் கற்களுக்கு வரியை அதிகரித்ததனூடாக உள்ளூர் மாணிக்கக் கல் வியாபாரிகளினால் மாணிக்கக் கல்வியாபாரம் செய்ய முடியாத சூழ் நிலை ஏற்படும். இவ் வரி விதிப்பானது பாரிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கேசாதகமாக அமையும். இலங்கை நாட்டில் மாணிக்கக் கல் வியாபாரத்தில் முஸ்லிம்களே சிறந்து விளங்குகின்றமைகுறிப்பிடத்தக்கது. அவர்களை முடக்குவதற்கும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கலாம் என்றசந்தேகமும் எமக்கு எழுகிறது.

மாணிக்கக் கல் வியாபாரிக்களுக்கு முன்னாள் ஜனாதிபதின் காலமே பொற் காலம்எனலாம். அவர்களின் வியாபாரங்களுக்கான அனுமதிகள் திறந்து விடப்பட்டிருந்தன.
இந்த அரசு போகும் போக்கை பார்க்கின்ற போது எதிர்காலத்தில் பிச்சை காரர்களுக்கும் வரிகளை அமுல்செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இலங்கையில் எத்தனையோ ஆட்சி இடம்பெற்றுள்ளது.இப்படியானதொரு ஆட்சி எங்கும் இடம்பெற்றதாகதெரியவில்லை. இவ்வரசில் ஊழல்வாதிகள் அதிகரித்திருப்பதால் அவர்கள் திருடும் பணத்தை சமாளிப்பதற்காகஇவ்வரசாங்கம் மக்கள் மீது வரியை சுமக்கவைக்கிறார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.