எப்.முபாரக்-
திருகோணமலை ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை பாலியல் ரீதியில் தடவிய நபர் ஒருவரை அடுத்தமாதம் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று(26) உத்தரவிட்டார். கந்தளாய், வான்எல, பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்று பாலியல் ரீதியில் நடக்க முற்பட்டதாகவும், சிறுமியிடம் பாலியல் ரீதியிலும் நடந்ததாக சிறுமியின் பெற்றோர்களினால் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய நேற்று(25) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரின் மனைவி வெளிநாடு சென்றுள்ளதாகவும், சந்தேக நபர் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் இன்று (26) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.