சபூர் ஆதம்-
மன்னித்திவிட்டோம், ஆனால் மறக்க முடியாத ரணங்களாக என்றுமே எங்கள் உள்ளச் சுவர்களில்.
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி ஏறாவூர் மிச்சநகர் என்ற முஸ்லீம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர் காயமுற்றனர்.
ஏறாவூர் மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் உள்ளது. மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்குள் துப்பாக்கிகள் கத்திகள் கோடரிகள் வாள்கள் சகிதம் சென்ற புலிப்பயங்கரவாதிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பில் 45 ஆண்கள் 28பெண்கள் 31 பிள்ளைகள் பலி எடுக்கப்பட்டார்கள்.
இதில் பல சிசுக்கள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் இதில் மிக வேதனைக்குறிய விடையம் முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் நடந்தது, இங்கு பெண்களும் சிறுவர்களும் அணிந்திருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டன.
இதில் கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரின் விபரங்களை மட்டும் இங்கு தருகின்றேன்.
• ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்
• ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்
• எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்
• ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்
• எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்
• எஸ். சனூஸியா- (01 வயது) -பெண்
• ஏ. றிபாகா -(01 வயது) -பெண்
• எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்
• எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்
• யூ. லாபிர் -(03 வயது)- ஆண்
• எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்
• ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்
• எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்
• எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்
• எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்
• எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்
• எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்
• எம். ஐ. எம். தாஹிர்- (06 வயது)- ஆண்
• எம். எல். எப். றிஸ்னா- (05 வயது)- பெண்
• எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்
• எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )
• எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)
• எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)
• ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்
• ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்
• எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)
• எம். ஐ. ஜரூன் -(10 வயது)
• எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)
• எம். ஐ. அஸ்றப் -(11 வயது)
• எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)
• எம். கமர்தீன் -(12 வயது)
• எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)
• ஏ. எல். மக்கீன்-(12 வயது)
• எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)
• ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)
• வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)
• எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)
• எம். எஸ். பைசல்-(13 வயது)
• எம். பீ ஜவாத்- (13 வயது)
• யூ. எல். எம். அனஸ்- (13 வயது)
• ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)
• எச். எம். பௌசர்-(14 வயது)
• ஏ. ஜௌபர்- (14 வயது)
• எம். எஸ். எம் சகூர் -(14 வயது)
• ஏ. சமீம்- (14 வயது)
• எம். இஸ்ஸதீன்- (15 வயது)
• எம். எம். எம். பைசல் -(15 வயது)
• எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்
• எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்
• எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்
• எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்
• எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்
• எம். எல். சமீமா-(10 வயது)- பெண்
• எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்
• எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்
• ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்
• ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்
• யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்
• ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்
• ஏ. எல் சமீர்- (10 வயது) -ஆண்
வரலாற்றுப்_பதிவுக்காக_மட்டுமே!