காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் - 2017

பழுலுல்லாஹ் பர்ஹான்-
ல்வி அமைச்சின் சுற்று நிருபத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் பாடசாலை மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் இடம்பெற்று வருகின்றன. இதனடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்தின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 2017 மாணவர் பாராளுமன்ற தேர்தல் நேற்று 16 புதன்கிழமை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் மௌலவிய்யா நயீமா அப்துல் ஸலாம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி 2017 மாணவர் பாராளுமன்ற தேர்தல் பணிகளில் வித்தியாலயத்தின் சிரேஷ்ட கணிதப் பாட ஆசான் வித்தியாகீர்த்தி எம்.எம்.அமீர் அலி ஆசிரியர் உட்பட ஏனைய ஆசிரிய,ஆசிரியைகளும் ஈடுபட்டனர்.

பாடசாலை மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான குறித்த தேர்தலில் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையிலான 273 மாணவிகள் நேற்றைய தினம் 2017 மாணவர் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்த போதும் 219 மாணவர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.

இதில் மொத்தமாக வாக்களிக்கப்பட்ட 219 வாக்குகளில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் 215 வாக்குகளில் மாத்திரமே செல்லுபடியான வாக்குகள் என்றும் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 2017 மாணவர் பாராளுமன்ற தேர்தல் மொத்த முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று பாடசாலை தேர்தல் ஆணையாளரும், ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் மௌலவிய்யா நயீமா அப்துல் ஸலாம் தெரிவித்தார்.

இதன் போது தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையிலான 219 மாணவிகள் சுமுகமான முறையில் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தலில் சபாநாயகர்,பிரதமர்,சபை முதல்வர்,பிரதிச் சபாநாயகர்,பிரதி செயற்குழுத் தலைவர்,அமைச்சர் 10 பேர்,பிரதி அமைச்சர் 10 பேர்,ஆலோசனை செயற்குழுக்கள் 10 அடங்களாக 45 மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான குறித்த தேர்தலில் 76 பெண் வேட்பாளர்கள் களத்தில் குதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -