சாய்ந்தமருது லக்ஸ்டோ மீடியா நெட்வேக் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் கிழக்குச் சீமையிலே-2017 ஹஜ்ஜூசுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர்; 2ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதிவரை கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
சாய்ந்தமருது லக்ஸ்டோ மீடியா நெட்வேக் ஸ்ரீலங்காவின் தலைவர் கலைஞர்; மருதூர் அன்சார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.இதில் கலை,கலாசாச்சார.வர்த்தகக் கண்காட்சியும் சர்வதேச தரம் வாய்ந்த சிறுவர் விளையாட்டுக்களும் மெகா இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இறுதி நாள் நிகழ்வில் பல்துறைசார்ந்த ஐம்பது பேருக்கு திறமைக்கான தேடல் விருதும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக லக்ஸ்டோ மீடியா நெட்வேக் ஸ்ரீலங்காவின் தலைவர் கலைஞர்; மருதூர் அன்சார் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் அதிதிகளாகக கலந்து கொள்ளவுள்ளனர்.