கிழக்கு மாகாண காணி நிருவாகத் திணைக்களத்தினை சேர்ந்த அலுவலர்கள் 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் கோரி விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி இம் மாதம் 15 ஆந் திகதியாகுமென கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.டீ.அனுரதர்மதாச.தெரிவித்தார்.
இதற்காக குடியேற்ற அலுவலர்கள், காணி வெளிக்களப்போதனாசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பம் செய்ய முடியும்
தொடர்ச்சியா ஒரு பிரதேச செயலக சேவை நிலையங்களில் 5 வருடம் தொடர்ச்சியாக சேவை செய்தோர் கட்டாயம் இடமாற்றம் கோரி விண்ணப்பிக்க வேண்டும் 5 ஆண்டுகளை விட குறைந்த காலத்தில் பணியாற்றுவோர் விண்ணப்பம் செய்தால் இது தொடர்பில் இடமாற்ற சபை தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தினை சார்ந்தோர் வேறொரு மாவட்டத்தில் கட்டாயம் கடமையாற்றவேண்டும்.என்ற அடிப்படையில் இடமாற்றங்கள் இடம்பெறும் இடமாற்ற சபையின் இறுதி முடிவு ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி அறிவிக்கப்படும்.,இது தொடர்பான மேன் முறையீடுகளை அலுவலர்கள் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரை சமர்பிக்க முடியும்,
அத்துடன் மேன் முறையீட்டு சபையின் தீர்மானம் நவம்பர் 02 ஆந் திகதி அறிவிக்கப்படும் அலுவலர்களின் .இடமாற்றங்கள் யாவும் 01.01.2018 ஆந் திகதி முதல் அமுலாகுமெனவும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.டீ. அனுர தர்மதாச மேலும் தெரிவித்தார்.