உயர்தர பொது அறிவுப் பரீட்சை 3ம் திகதிக்கு ஒத்திவைப்பு - அமைச்சர் ரிஷாட்டின் கோரிக்கை ஏற்பு

ஊடகப்பிரிவு-
திர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாடத்தின் பரீட்சையை அடுத்த நாள் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

ஏதிர்வரும் 2ஆம் திகதி முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தினத்தை கொண்டாடுவதால், அன்று இடம்பெறவிருந்த குறிப்பிட்ட பாடத்திற்கான பரீட்சையை, பிற்போடுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அமைச்சர் அகிலவிராஜ்; அறிவித்துள்ளார். 

பரீட்சையை திட்டமிட்டப்படி உரிய தினத்தில் நடாத்தாமல், அடுத்த நாள் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதன் மூலம், பரீட்சை திணைக்களத்திற்கு மேலதிக செலவும், சில கஷ்டங்களும் இருக்கின்றபோதும், முஸ்லிம்களின் புனித பண்டிகையான ஹஜ் பெருநாள் தினத்தில் அந்தப் பரீட்சையை நடாத்துவது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை கவனத்திற்கொண்டே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்தார். 

இந்தவிடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் புஷ்பகுமாரவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் தொடர்புகொண்டு, பரீட்சையை அடுத்தநாள் நடாத்தும் இந்தத் தீர்மானத்தை உறுதிப்படுத்தினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -