அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 5.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூதூர், தக்வா நகரில் அமைக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையத்தினை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு 15 ஆந் திகதி இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ்வைத்தியசாலைகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபானி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர் சட்டத்தரணி ஜே.எம்., லாஹிர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர் உசைனுடீன், கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர் ஸ்ரீதர் மூதூர் வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி உள்ளிட்ட பல ர் கலந்துகொண்டனர்.இதன்போது கிராமிய சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் தனது நினைவாக சுகாதார அமைச்சர் நசீர் நாட்டிவைத்தார்.