சம்மாந்துறையில் 85 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்





எம்.எம்.ஜபீர்-

ம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 85 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நேற்று (12) ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ. காதிர், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.முஸ்தபா, நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செலயாளர் ரகுமத் மன்சூர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் எம்.எம்.நஸீல், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் என்.எம்.ஆஷீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் வை.வீ.சலீம், நீர் வழங்கல் அதிகார சபையின் அதிகாரிகள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அனைவருக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் செலவில் நெய்னாகாட்டுக்கான குடிநீர் விநியோகம், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஓதுக்கீட்டில் 30 மில்லியன் ரூபாய் செலவில் வண்டு வாய்க்கால் வீதிக்கான காபட் இடல், 15 மில்லியன் ரூபாய் செலவில் மல்2ஆம் வீதிக்கான காபட் இடல் ஆகிய வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -