நிந்தவூரில் ஒசுசல திறக்கப்படுகின்றது..!

மு.இ.உமர் அலி-
ரையோர பிராந்திய மக்களின் நன்மை கருதி தரமானதும் விலை குறைந்ததுமான மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் 'ஒசுசல' விற்பனை நிலையம் ஒன்று நிந்தவூர் -25 பிரதான வீதியில் முபாஸ் பூட் சிட்டிக்கு வடக்குப்புறமாக உள்ள கட்டிடத்தொகுதியில் எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களால் கோலாகலமாக திறந்துவைக்கப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச மக்கள் மருந்துப்பொருட்களை மலிவாக பெற்றுக்கொள்வதற்கு இதுவரை அம்பாறை நகரிற்கே செல்லவேண்டி இருந்தது. ஒசுசல ஒன்றினை மக்கள் பிரதிநிதிகள் இப்பிரதேசத்தில் அமைக்க மாட்டார்களா என்று மக்கள் பெரும் அவாவுடன் இருந்தனர்.

மக்களின் நீண்டநாள் தேவையை கருத்திற்கொண்ட சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசீம் அவர்களது வேண்டுகோளிற்கு இணங்கவே இந்த ஒசுசல ஞாயிற்றுக்கிழமை நிந்தவூரில் திறக்கப்படுகின்றது. இதுமட்டுமன்றி மாவட்டத்தின் இரு வெவ்வேறு இடங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களை மிக விரைவில் ஆரம்பிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு பிரதியமைச்சர் பைசால் காசீம் அதிகாரிகளை பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -