
Mohamed Nizous-
சொந்தச் செலவினிலே
சூனியம் வெச்சுக் கொள்ள
தந்து இருக்கான்கள்
தனியான அப். ஒன்று
பேக் ஐடி வைத்து
பின்னி எடுத்தவனுக்கு
கேட்கப் பார்க்க ஆளின்றி
கேப்பில் கிடாய் வெட்ட
ஆக்கி வெச்ச அப் இது
தூக்கி வெச்சு செய்யுறான்கள்
வேலிக்கு அங்கால
விளங்காம நின்று கொண்டு
கோலிங் பெல்ல அமத்தி விட்டு
கூய் போட்டு ஓடியதன்
இண்டனெட் வேர்ஷன்
இந்த sarahah
தானே தனக்கெழுதி
சீன் போட்டு செயார் பண்ணும்
கேண வேலை செய்வதற்கும்
கிளம்பி வரும் இனிக் கூட்டம்
முகம் தெரியா ஆசாமி
சுகம் கேட்கும் போது வரும்
திருப்திக்காய் சில பேரு
தேடிப் போடுகிறார்.
இந்த அப்பில் என்றாலும்
என்னப் பற்றி உண்மை நிலை
வந்து சொல்லிப் போக என
வச்சிருக்கார் சில பேரு.
சொம்பு நல்லா பட்டிருக்கு
சொந்த அனுபவம் என்று இங்கு
வந்து சிலர் கொமண்ட் இடுவார்
வழக்கமாக நடப்பதுதான்
அனுப்பியர் யாரென்று
அறிகின்ற நாள் வந்தால்
பிணப் பெட்டி யாவாராம்
பெரிதாக நடக்கக் கூடும்