சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கிடைப்பதற்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் அதனை குழப்பியடித்து அந்தச் சபையை இல்லாமலாக்கும் முயற்சியில் கல்முனை படித்தவர்களும் பள்ளிவாசல் சம்மேளனும் வரத்தக சமூகத்தினரும் ஈடுபடுவது மிகவும் வேதணையானது.
சாய்ந்தமருது மக்கள் தமக்கென ஒரு சுயாட்சியை கோரியதில் பல்வேறு காரணஙகள் இருக்கின்றன. காலா காலமாக கல்முனை சமூகத்தால் சாய்ந்தமருது மக்கள் நசுக்கப்பட்டதும் அவர்களை கிள்ளுக்கீரைகளாக நினைத்து கல்முனை உள்ளுராட்சி அதிகாரங்கள் நடாத்தியமையும் இந்தக் கோரிக்கையை எழுவதற்குக் காரணம். சாய்ந்தமருதுக் குப்பைகளை அகற்ற வக்கில்லாத கல்முனை மாநகரசபை தற்போது ஒற்றுமை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கின்றது.
கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான சந்தையில் ஒரு தேநீர்க் கடையைக்கூட வைப்பதற்கு அனுமதி வழங்காத கல்முனை சமூகம், சாய்ந்தமருது மக்கள் பிரிந்து போக நினைக்கும் போது ஒற்றுமை பற்றிப் பேசுவது வேடிக்கையானது.
சாய்ந்தமருது மக்கள் பிரிந்து போகும் முடிவை மேற்கொண்டமைக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது தலைமைப் பதவியை தக்க வைப்பதற்காக மாநகரசபையில் தனது சித்த விளையாட்டை ஆரம்பித்து தனது தலைமைக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுருத்தலை கெட்டித்தனமாக இல்லாமல் செய்தார். இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்தியது கல்முனையானை திருப்திப்படுத்திய அதே வேலை தனது தலைமைப்பதவிக்கு காரியப்பரால் வந்த அச்சுறுத்ததலை நீக்கினார். கல்முனை என்ற குருகிய வட்டத்துக்குள் நிஸாம் காரியப்பரை அவர் முடக்கினார்.
இந்த நிலையில் சாய்ந்தமருது மக்கள் தனிசபை கேட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் சாய்ந்தமருதின் சில அரசியல்வாதிகள் முன்னாள் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் அதாவுல்லாவை நம்பி அவருக்கு தமது ஆதரவை தெரிவித்த போதும் அதாவுல்லா இயதசுத்தியுடன் இந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதில் இழுத்தடிப்புச் செய்ததால் சாய்ந்தமருது மக்கள் ஏமாற்றப்பட்டனர்.
சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சி குறிப்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் உற்பட சாய்ந்தமருதின் முன்னாள் மு.கா முக்கியஸ்தர்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கரத்தைப் பலப்படுத்தியதன் விளைவினாலேயே சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை மலர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்ர் றிஷாட் பதியுதீன், பிரதித்தலைவர் ஜெமீல் ஆகியோரின் இடையுறா முயற்சியினாலும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் பைசர் முஸ்தபாக்குமான நெருக்கமான உறவினாலே இந்த புதிய சபை கணிந்துள்ளது.
அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இணைந்து சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் கடந்த 21.10.2016 இல் பிரதித் தலைவர் ஜெமீலினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு, பிரதித் தலைவரின் அழைப்பை ஏற்று சாய்ந்தமருதுக்கு வந்து அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவரது உரையிலேயே பகிரங்க உறுதி கொடுத்தார்.
இது இப்படி இருக்க மு.கா வினர் இந்த உள்ளுராட்சி சபை விவகாரத்தில் பாம்புக்கு தலையையும் மீனுக்குத் வாலையும் காட்டும் விலாங்காக நடந்தனர்.
சாய்ந்தமருதானுக்கு ஒரு கதை கல்முனையானுக்கு இன்னொரு கதை கூறிய மு.கா தலைவர் இன்று ஆப்பிழுத்த குரங்காக மாறியுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை கல்முனை சந்தாங்கேணி மைதானத்துக்கு கொண்டு வந்து சாய்ந்த மருதுக்கு தனியான பிரதேசசபை வழங்குவவேன் என ரணிலின் வாயால் கூற வைத்தவர் ஹக்கீமே. தேர்தலுக்காக அவர் இவ்வாறு நடந்துகொண்டதனால் பின்னர் இதனைக் கிடப்பில் போட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் மு.கா கூட்டத்தில் ரணில் இவ்வாறு கூறிய போது மு.கா குஞ்சுகள் விசிலடித்து கை தட்டினர் இதில் கல்முனையாரும் அடக்கம்.
இத்தனை நடந்த பிறகு சும்மா இருந்த கல்முனை சமூககத்தைச் சேர்நத சில மேதாவிகள் இறுதி நேரத்தில் இதனைக் குழப்பியடைக்க ஏன் முயல்கின்றனர்.