கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து அதாவது 13 வருடங்களாக இந்த குமாரி என்னும் பெயர் முஸ்லிம் அரசியல் அரங்கில் பேசப்பட்டு வருகின்றது. காலத்துக்கு காலம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது சேறு பூசுவதுடன், அவரை முஸ்லிம் காங்கிரசின் தலைமைப் பதவியிலிருந்தும் அகற்றுவதற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தரப்பினர் மரணித்துப்போன குமாரியின் பெயரை பயன்படுத்தி வருகின்றார்கள்.
ஆனால் இவர்களால் எந்தவித முன்னேற்றத்தினயோ அல்லது தங்களது இலக்கினையோ அடைய முடியவில்லை. இந்த பதின்மூன்று வருடங்களுக்கும் ஒரே பெயரை மட்டும் உச்சரிக்கும் இவர்களின் வரலாற்றில் எத்தனை குமாரிகளை மூடிய அறைக்குள் அனுபவித்து இருக்கின்றார்கள் என்பது அந்த அல்லாஹ்வுக்கும் அவர்களுக்குமே தெரியும்.
இவர்களின் எந்தவித விபச்சாரங்களையும் யாரும் கதை எழுதியதுமில்லை. ஊடகங்களில் வசைபாடி கேவலப் படுத்தியதுமில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு மிகவும் கேவலமான செயல்களை செய்வதற்கு பசீர் சேகுதாவூத் போன்றவர்களை தவிர வேறு யாரும் இவ்வுலகில் இருக்கமுடியாது.
இந்த குமாரியின் கதை இன்று 25 வயதினை தாண்டாத இளைஞ்சர்களுக்கு கேட்பதற்கு புதிதாக இருக்கலாம். ஆனால் கடந்த 2௦௦4 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கேட்டுக் கேட்டு அலுத்துப் போனவர்களுக்கு இதில் புதிதாக கேட்பதற்கு ஒன்றுமில்லை. அதே பல்லவியை திரும்பத் திரும்ப, அதாவது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரே கதையினை வெவ்வேறு கதாசிரியர்கள் மூலமாக எழுதி வருகின்றார்கள்.
அவள் உயிரோடு இருந்திருந்தால் ஏதாவது புதிதாக நாங்கள் சிந்திக்கலாம். அல்லது அவளை கூட்டிவந்து ஒப்புவித்திருக்கலாம். ஆனால் தங்களது கூற்றுக்கு பதில் தரமுடியாத, அதாவது என்றோ மரணித்துப்போன அவளைப்பற்றி தங்களது அற்ப அரசியலுக்கான மூலதனமாக பாவிப்பதன் மூலம் இவர்கள் நினைப்பதுபோன்று எதனையும் அடைந்துவிட முடியாது.
ஒரு நபர் பொலிசில் முறைப்பாடு ஒன்றினை செய்வதென்றால் அதற்கென்று ஒரு விதிமுறை இருக்கின்றது. அதாவது தனக்கு எதிராக ஒருவர் செய்த குற்றத்தினை நேரடியாக கூற வேண்டும். அதனைத்தான் பொலிசார் பதிவு செய்வார்கள்.
ஆனால் இங்கே குமாரி முறைப்பாடு செய்ததாக வெளியிட்டுள்ள கதையில் மிகவும் திட்டமிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை எவ்வாறெல்லாம் கேவலப்படுத்தலாம் என்று சம்பந்தமில்லாத பல திரைக்கதைகள் புனையப்பட்டுள்ளது.
இவ்வாறான சுற்றிவளைத்து நாவல்களில் கூறப்பட்டுள்ள கதையம்சத்தினைக் கொண்ட முறைப்பாட்டினை பொலீசார் ஏற்றுக்கொள்வதற்கான எந்தவித சந்தர்ப்பமுமில்லை.
எனவே மக்கள் செல்வாக்கு இல்லாத தனக்கு இம்முறையும் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்காததனால் தனது அரசியலே அஸ்தமித்து போன நிலையில் எப்படியாவது ரவுப் ஹக்கீமை பழி வாங்கியே தீருவேன் என்று வரிந்துகட்டிக்கொண்டு செயல்படுகின்ற பசீர் செகுதாவூத்தும், அவருடன் கைகோர்த்து உள்ளவர்களும் எதிர்காலங்களில் தொடர்ந்து புதுப்புது வடிவங்களில் இந்த குமாரியை வைத்து திரைக்கதை அமைத்து காலத்தினை ஒட்டி அழிந்து போவார்களே தவிர இவர்களால் எதனையும் சாதிக்க முடியாது.
முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.