இனவாதம் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது - ஹிஸ்புல்லாஹ் காட்டம்

னவாதத்தை பரப்பி சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டி விடுவதன் மூலம் அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கைப்பற்ற முடியாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 

30 வருட கால பயங்கரவாத யுத்தம் நாட்டின் நிலையான சமதானத்தை சீர்குலைத்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அது சரியான முறையில் நிலைநாட்டப்படவில்லை. அதற்கான முயற்சிகள் இன்று வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழலில், இனவாதம் சமூக வலைத்தளங்கள் ஊடாக மிக மோசமான முறையில் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் - சட்டதிட்டங்கள் எம்மத்தியில் இல்லாமல் இருக்கின்றன.

இந்நிலையில், இனவாதத்தை பரப்பி சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் முயற்சி செய்து வருகின்றனர். கிழக்கு மாகாணத்திலும் இந்நிலை உருவாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும். 

தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதன் ஊடாக தமது அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ள சிலர் முனைகின்றனர். தேங்காய் பூவும் பிட்டும் போல் இருந்த தமிழ் - முஸ்லிம் மக்களிடையே தற்போது பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சீர் செய்து பழைய நிலைக்கு இரு சமூகங்களுக்கிடையிலான உறவை கொண்டு செல்வதற்கு சமூக தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கு பாரிய பொறுப்புள்ளது. 

யுத்தத்துக்கு பின்னர் தமிழ் - சிங்கள மக்களிடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசால் முன்னெடுக்கப்பட்டன. எனினும், போரால் விரிசலடைந்த தமிழ் - முஸ்லிம் மக்களிடையிலான உறவை பலப்படுத்துவதற்கான முயற்சிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. – என்றார். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -