மீராவோடை உதுமான் வித்தியாலத்திற்கான வகுப்பறைக் கட்டடம் திறந்து வைப்பு..!

எம்.ரீ.ஹைதர் அலி-
ட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மட்-மம- மீராவோடை உதுமான் வித்தியாலத்திற்கான வகுப்பறைக் கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு 2017.08.25-வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

பாடசாலை அதிபர் எம்.பீ. முபாறக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

மேலும் அதிதிகளாக மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் தலைவரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தலைவருமான கே.பி.எஸ்.ஹமீட், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். ஜுனைட், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்குடா கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். இஸ்மாயில், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர் ஏ.எம். ஜாபிர் கரீம், மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையின் பிரதித்தலைவர் அல்ஹாஜ். ஏ.எல். அலியார், நிருவாக சபை உறுப்பினர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 

மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையினர் மேற்கொண்ட பூரண முயற்சியினால் இலங்கைக்கான சவூதி தூதுவராலயத்தினால் சுமார் இருப்பத்தி எட்டரை இலட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்பில் இவ்வகுப்பறைக் கட்டடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் போதியளவான வகுப்பறைக் கட்டிடம் இன்மையால் சில மாணவர்கள் தற்காலிக கொட்டில்களில் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ள நிலையில் இக்கட்டம் அமையப்பெற்றது மிகப்பெறும் உதவியாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -