'மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள்' எனும் தொனிப் பொருளிலான பரா ஒலிம்பிக் போட்டிகள்.








ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

'மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள்' எனும் தொனிப் பொருளிலான வடக்கு கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் போட்டி நிகழ்வுகள் சனிக்கிழமை (05.08.2017) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்குகொள்ளும் இப்போட்டி நிகழ்வு இரண்டாவது முறையாக மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்ததின் தலைவர் எஸ். பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் அதிதிகளாக, கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.எம். அன்ஸார், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வெல்லக்குட்டி தவராஜா, மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி, சிரேஷ்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எம். அலியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -