முஸ்லீம் மாணவி மீது பொய்யான செய்தி வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்

ம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் (11) திகதி உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் மறைக்கும் படியாக முஸ்லீம் கலாச்சார உடையுடன் (அபாயா) அணிந்து வந்திருந்தார் எனவும்,புளுத் டுத் ஹெட் செட் உதவியுடன் உயர் தர பரீட்சையை எழுதிய முஸ்லீம் மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வந்தது.

இது தொடர்பாக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எச்.உப்புல் பியலால் ஆகியோர் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து கூறியதாவது.

 சம்மாந்துறை வலயக் கல்வி பிரதேசத்தில் 6 பரீட்சை நிலையங்களில் உயர் தரப் பரீட்சை இடம்பெறுவதாகவும் இன்று வரை இவ்வாறான எந்த ஒரு சம்பவமும் இடம்பெறவில்லை எனவும் சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் ஆகியோர்கள் உறுதிப்படுத்தினர்.

இது இவ்வாறிருக்க குறித்த செய்தியை வெளியிட்ட செய்தியாளர் யார் எந்த இணையத்தில் வெளியானது என்று விசாரணை மேற்கொள்ளுமாறு சமூக அமைப்பு பொலிசாரைக் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -