கல்முனையூர் அப்றாஸ்-
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்தும் DEMAK Challenge Trophy 2017 சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டி இன்று (01) கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் சாய்ந்தமருது டஸ்ககஸ் விளையாட்டுக்கழகத்திற்குமிடையிலான போட்டி நடைபெற்றது.
இன்றைய ஆரம்ப போட்டியானது கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் A.M. றியாஸ் அவர்கள் நாணயச் சுழற்சி செய்து ஆரம்பித்து வைத்தார்.30 ஓவரைக்கொண்ட
இப்போட்டியில் முதலில் தூடுப்படுத்தாடிய கல்முனை லெஜன்ஸ் அணி 29.4 பந்து வீச்சு ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து ஓட்டங்களை 152 -9 தூடுப்பாட்டமாக பெற்றது.பதிலுக்கு தூடுப்பாடிய சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக் கழகம் 24.3 பந்து வீச்சு ஓவரில் 4 விக்கட்டை மாத்திரம் இழந்து ( 155-4 ) இப் போட்டியில் வெற்றி பெற்றது.