நல்லாட்சியில் இடம்பெறும் ஊழல்களை தட்டிக்கேட்டால் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக்க குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதான அதிகாரியும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளருமானமுகுந்தன் கனகே தனது பதவியிலிருந்து கடந்த 11ம் திகதி இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இவர் தனது இராஜினாவிற்கு மஹாராஜா நிறுவனத்திற்கு 25மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஸ்பெக்றம்ஒன்றை எந்தவித விலைமனு கோரலுமின்றி வழங்கியது தொடர்பில் கேள்வி எழுப்பியமையினாலேயே காரணம் எனகுறிப்பிட்டுள்ளார்.
25மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஸ்பெக்றம் ஒன்றை எந்தவித விலைமனு கோரலுமின்றி வழங்குகின்றஅந் நிறுவனத்தின் தலைவர் யாராக இருந்தாலும் கேள்வி எழுப்புவார்கள்.அது தொடர்பில் விசாரணை செய்து உரியநடவடிக்கை எடுப்பதே ஆட்சியாளர்களின் கடமை.அதிலும் குறிப்பாக தற்போதைய ஆட்சி ஊழலை ஒழிக்க வந்தஆட்சியல்லவா?
குறித்த இராஜினாமா ஜனாதிபதியின் உத்தரவுக்கமை இடம்பெற்றுள்ளது."நீ ஏன் இது தொடர்பில் கேள்வி எழுப்பவில்லை" என கேட்பதை விடுத்து "ஏன் கேள்வி எழுப்பினாய் " என கேட்கும் நிலையிலேயே ஊழலை ஒழிக்க வந்த நல்லாட்சியின்நிலை உள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதானால் வெளியேறுங்கள் எனரஞ்சன் ராமநாயக்கவை நோக்கி கூறியிருந்தார். இது போன்ற காரணங்களுக்காக விஜயதாஸ ராஜபக்ஸவின் மீதுநம்பிக்கையில்லா பிரேரணையை கூட கொண்டுவர உள்ளார்கள்.இவரை கூட்டு எதிர்க்கட்சி காப்பாற்றும் நிலைஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி செயலாளர் என பலர் ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்தஅனைவரும் ஊழலுக்கு துணைபோக மறுத்தவர்கள்.இது திடர்பான அனைத்து ரகசியங்களையும் நாம் வெளியிடுவோம்.
இப்படியான விடயங்களுடன் ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஊழலை ஒழிக்க வந்த ஆட்சியின்ஊழலை ஒழிக்க வேண்டும்.ஊழல் செய்வதை விட ஊழலுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களை ஒழிப்பது மிகவும்பாரதூரமான விடயமாகும் என அவர் குறிப்பிட்டார்.