மாகாணசபை உறுப்பினர் அஸ்மினின் பதவி பறிக்கப்படவேண்டும்!!



 ஏ.எம்.றிசாத்-
டமாகாணசபை உறுப்பினர் ஐயுப் அஸ்மினின் அன்மைக்கால போக்குகள் அறிக்கைகள் எல்லாம் வடமாகாண முஸ்லிம்மக்களை பாசிச சிந்தனை ஆட்சியாளர்களிடம் அடகுவைப்பதுபோல் இருக்கின்றது.

புலிகள் செய்த இன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் எல்லாம் கடந்த காலத்தில் இருந்து இன்றுவரை யாரும் அவர்களை பாதுகாக்க முயற்சிக்கவில்லை அவர்கள் முஸ்லிம்மக்களுக்கு செய்த துரோகமாக தான் பார்க்கின்றார்கள் ஆனால் முஸ்லிம் பெயரில் அரசியல் இருப்புக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுகின்ற வேலையை அஸ்மின் செய்வது வேதனையான விடயமாகும்.

1990ம் ஆண்டு எமது சமூகம் இன்றும் அந்த நாளை துக்க நாளாக இன அழிப்பு நாளாக பார்க்கின்ற காத்தான்குடி பள்ளி கொலைச் சம்பவம் இதை செய்தவர்கள் பாசிச புலிகள் தான் என்று சர்வதேசமும் இலங்கை அரசும் ஏற்றிக்கும் நிலையில் இந்த அஸ்மின் அதை புலிகள் செய்ய வில்லை என்று அவர்களை பாதுகாக்க நினைப்பது ஏன்? இவர் யாரின் நிகழ்ச்சி நிரழில் அரசியல் செய்கிறார் அவரின் கட்சியின் பார்வையும் இதுதான?

புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பு கூட இந்த விடயத்தை பற்றி எதுவும் பேசவில்லை புலிகளை பதுகாக்கவும் இல்லை இந்த கூட்டமைப்பு மூலம் அரசியல் முகவரி எடுத்த இந்த அஸ்மின் இன்று புலிகளை பாதுகாக்க நினைப்பது அவரின் அரசியல் இருப்பை பாதுகாக்க தான் இவரின் சுயநல அரசியலுக்கு வடமாகாண முஸ்லிம் மக்களை அடகுவைத்து ஆதாயம் தேட நினைப்பது கண்டிக்க வேண்டிய விடயமாகும்.

இன்று காத்தான்குடி பள்ளி கொலை சம்பவத்தை புலிகள் செய்ய வில்லை என சொல்லும் இந்த அஸ்மின் நாளை வடமாகாண முஸ்லிம்களை புலிகள் வெளியேற்ற என சொல்லவும் செய்வார்.அவரின் அரசியல் ஆசைக்கும் கூட்டமைப்பை திருப்திப்படுத்தவும் டயஸ்போராக்களின் பணத்துக்கும் அஸ்மின் எதையும் பேசுவார் இவர் எந்த கட்சி மூலம் அரசியலுக்கு வந்தாரோ அந்த கட்சிக்கும் இன்று துரோகத்தை செய்து வருவது அறிந்த விடயமே.

இந்த அஸ்மினுக்கு அரசியல் முகவரி கொடுத்த NFGG கட்சி இவரின் மாகாண்சபை பதவியை பறிக்க வேண்டும் எமது சமூகத்தை காட்டிக்கொடுத்து அரசியல் இருப்பை பாதுகாக்க நினைக்கும் துரோகி சமூகத்தில் இருந்து தூரமாக்கப்பட வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -