இலங்கைக்கான மேலதிக ஹஜ் கோட்டாக்கள் தொடர்பில் சவுதி ஹஜ் அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பு முஸ்லிம் கலாசார திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹலீம் அவர்களின் பிரத்தியேக செயலாளர் பாஹிம் ஹாஷிம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மேலதிக ஹஜ் கோட்டாக்களை பெற்றுக்கொடுக்குமாறு முஸ்லிம் கலாசார அமைச்சர் ஹலீம் சவுதி அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்த நிலையில் சவுதி அரேபிய அரசு இது தொடர்பில் கரிசனை எடுத்து 600 மேலதிக கோட்டாக்களை பெற்றுக்கொடுப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் நாளை காலை 10 மணிமுதல் முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் எதிர்வரும் ஞாயிறு அன்று இவர்கள் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள சகல விதமான முன்னெடுப்புக்களையும் திணைக்களம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதே நேரம் ஹஜ் பயணத்திற்கான முற்பணமோ அல்லது கொடுப்பனவுகளையோ செலுத்தும் முன்னர் குறித்த முகவர்கள் ஹஜ் முகவர்களாக திணைக்களத்தினால் அங்கீரகிக்கப்பட்டவர்களா என்பதை பரிசீலனை செய்து பார்த்துக்கொள்ளும் படி நாம் பொதுமக்களிடம் வினயமாக கேட்டுக்கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.