உம்றா, ஹஜ் லீவு தொடர்பாக கிழக்கு ஆளுநருடன் உதுமாலெப்பை விசேட சந்திப்பு..!

எம்.ஜே.எம்.சஜீத்-
மார்க்க கடமைகளுக்காக செல்லும் லீவு தொடர்பாக புதிதாக விதிக்கப்பட்ட தடையினை நீக்குமாறு கிழக்கு ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை கோரிக்கை.  கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகள், ஆசிரியர்கள் உம்றா, ஹஜ் மார்க்க கடமைகளுக்காக செல்லும் லீவு தொடர்பாக புதிதாக விதிக்கப்பட்ட தடையினை நீக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று (4) கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் ஆளுநரிடம் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகள், ஆசிரியர்கள் உம்றா, ஹஜ் மார்க்க கடமைகளுக்காக மக்கா நகர் செல்லும் போது வழங்கப்படும் விடுமுறை தொடர்பாக புதிதாக விதிக்கப்பட்ட தடையின் காரணமாக இந்த மாதம் முற்பகுதியில் புனித மக்கா நகர் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான விசா, வைத்திய அறிக்கை ஏற்பாடுகள் எல்லாம் நிறைவு செய்து விட்டு மக்கா நகர் செல்ல இருந்த முஸ்லிம் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு இறுதி நேரத்தில் கடந்த 05 வருட காலத்துக்குள் உம்றா, ஹஜ் கடமைகளுக்காக சவுதி அரேபியா சென்றவர்கள் மீண்டும் உம்றா, ஹஜ் கடமைகளுக்காக புனித மக்கா நகர் செல்வதற்கு விடுமுறை வழங்க முடியாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகளும், ஆசிரியர்களும் தங்களின் மார்க்க கடமையினை நிறைவேற்ற முடியாமல் தடுக்கப்பட்டுள்ளமை குறித்து கவலை அடைந்துள்ளனர்.

மத்திய அரசாங்க கல்வி அமைச்சில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் முஸ்லிம் அதிகாரிகள், ஆசிரியர்கள் புனித மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்காக வெளிநாடு செல்வதற்கான விடுமுறைகள் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் கிழக்கு மாகாண அதிகாரிகள், ஆசிரியர்கள் கடந்த 05 வருட காலத்துக்குள் உம்றா, ஹஜ் கடமைகளை நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை உம்றா, ஹஜ் கடமையை செய்வதற்கு அவர்களுக்கு விடுமுறை வழங்க முடியாது என்ற நிபந்தனையையும், இலங்கைக்கு வெளியே சமயயாத்திரை செல்பவர்கள் பாடசாலை விடுமுறை காலங்களிலே செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற புதிய விதியும் வழங்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் துல்கஃதா, துல் ஹஜ் ஆகிய மாதங்களில் தான் தங்களின் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மக்கா நகர் செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த நிபந்தனையைால் கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகளும், ஆசிரியர்களும் தங்களுடைய மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை இழக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. 

எனவே, இந்த புதிய நிபந்தனைகளை நீக்கி கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகளும், ஆசிரியர்களும் தங்களின் மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும், இந்த விடயம் புதிய ஆளுநருக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம் ஆசிரியர்கள், அதிகாரிகளுக்குமிடையில் மனக்கசப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளதுடன் இந்த நிலைமை ஒரு சில அதிகாரிகளினது தவறுதலான வழிகாட்டலின் காரணமாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர் மற்றும் நாகலிங்கம் திரவியம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -