வாழைச்சேனை அல் அஸ்ஹர் விளையாட்டு கழகம் நடாத்திய அணிக்கு ஏழு பேர் கொண்ட 16 அணிகள் பங்குபற்றிய ஒரு மாத தொடர் உதைப்பந்தாட்டப் போட்டியில், ஏறாவூர் லக்கி ஸ்டார் அணியினர் 2:1 என்ற அடிப்படையில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கழகத்தின் தலைவர் நெய்னாமுஹம்மத் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிறைச்சேனை விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 06.08.2017 இடம்பெற்ற இறுதிச் சுற்றில் ஏறாவூர் லக்கி ஸ்டார் அணியினர் 1வது இடத்தையும், வேர்ள்ட் ஸ்டார் கழகம் 2வது இடத்தையும், வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவர் அணியினர் 3வது இடத்தையும் பெற்று முறையே 10 ஆயிரம், 8 ஆயிரம், 6 ஆயிரம் ரூபாய் பணப்பரிசினையும் கேடயத்தையும் பெற்றுக் கொண்டனர்.