அலுத்கமையில் கொலைசெய்யப்பட்ட முஸ்லிம் வாலிபர்கள் நல்லாட்சியின் பலி கடாக்களா..?

தாஜுதீனின் கொலையில் காட்டும் அக்கறை அலுத்தகமையில் கொல்லப்பட்டவர்கள் மீது இந்த நல்லாட்சியாளர்கள்காட்டாதது ஏன் என குருனாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ கேள்வி எழுப்பினார். குருநாகலை திவ்லபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்;

இன்றைய அரசின் அரசியல் வியாபாரப் பொருளான தாஜுதீனின் கொலையில் காட்டும் அக்கைறையானது அளுத்கமைகலவரத்தில் கொல்லப்பட்ட இருவர் மீதும் இல்லாமல் இருப்பது ஏன் என்ற வினாவே தாஜுதீனின் கொலையானது மீளமீள தோண்டப்படுவதானது அரசியல் இலாபம் கொண்டதென்பதை மேலும் உறுதி செய்துள்ளது.

எந்த விடயமாக இருந்தாலும் நோக்கம் சீரானதாக இருக்க வேண்டும். உயிர் என்றால் அது யாருடையது என்றாலும்பெறுமதியானதே.அது தாஜுதீனுடையதாக இருந்தாலும் சரி அழுத்கமையை சேர்ந்தவர்களுடையதாக இருந்தாலும்சரியே. அலுத்கமையில் கொல்லப்பட்டவர்கள் பற்றி இவ்வரசு சிறிதும் கவனம் செலுத்துவதாக இல்லை.இருந்தபோதிலும் தாசுதீனின் கொலையை பெரிதாக தூக்கி பிடித்துள்ளது.

இதன் மூலம் இவ்வரசானது தாஜுதீனின் மரணத்தை ,ஒரு உயிர் என்ற நோக்கத்தில் விசாரணைசெய்யவில்லை.அரசியல் லாபங்களுக்காகவே விசாரணை செய்கிறது.அளுத்கமை கலவரத்தில் கொல்லப்பட்டஇருவரின் கொலைக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் ஏதாவது சிறிது சம்பந்தம் இருந்திருந்தாலும் அதனை இவ்வரசுநிச்சயம் விசாரணை செய்திருக்கும். 

அலுத்கமை கலவரத்திற்கு ஞானசார தேரரும் அவரை ஏவிவிட்ட அணியும் காரணமாக இருப்பதால் அங்கு இடம்பெற்றகொலைகளுக்கி காரணமாகவர்கள் யார் என்பதை அறிய விசாரணைகள் செய்யப்பட மாட்டாது.அதே நேரம் முன்னாள்ஜனாதிபதியுடன் ஒரு கொலைக்கான சிறு விடயம் சம்பந்தப்பட்டாலும் அதனை துருவி துருவி ஆராய்வார்கள்.இது தான்இந் நல்லாட்சியின் நீதியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -