திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வநாயகபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆரம்ப வைத்தியசாலையில் கடந்த இரு நாட்களாக (17-19) வெளிநோயாளர் பிரிவு இயங்காமையினால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் வீடு திருப்பபட்டுள்ளதாக இலங்கை அரசாங்க பொதுச்சேவைகள் சங்கத்தின் தலைவி திருமதி மதிவண்ணன் சுபத்திரா கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு கையளித்த தனது உத்தியோகபூர்வ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 16 வருடங்களுக்கு முன்னர் இரு ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட செல்வநாயகபுர ஆரம்ப வைத்தியசாலையானது இன்றைவரைக்கும் இப்பகுதி மக்கள் உட்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இவ்வைத்தியசாலையினூடாக பயனடைந்து வருகின்றார்கள் நாளாந்தம் 200 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றமையும் இதில் குழந்தைகள் முதியோய்கள் கர்ப்பிணிப்பெண்கள் என பலர் நன்மயடைகின்றனர்கள் ஆனால் கடந்த இம்மாதம் 17 தொடக்கம் 19 வரையான இரு நாட்களும் வெளிநோயாளர் பிரிவில் வைத்தியர்கள் இன்மையால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியமையும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளதாகவும் மக்கள் தங்களது கவலைகளை என்னிடம் வெளிப்படுத்தியுள்ளார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு வைத்தியர்கள் மாத்திரமே இங்கு கடமை புரிகின்றனர் லீவு எடுப்பதாக இருந்தால் பதில் கடமைக்கு வேறு வைத்தியர் நியமிக்கப்படாமையும் பிரச்சினைகளை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது நோயாளர்களின் ஏமாற்றம் தொடர்பாக வெளிநோயாளர் பிரிவின் இரு நாட்களுக்கான பதிவேட்டினை பார்க்கமுடியுமென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு தொலைபேசியூடாக உரையாடியதன் பிற்பாடு தான் தனது சங்கம் ஊடாக எழுத்து மூலமான கோரிக்கையினை அமைச்சில் கையளித்தும் சுகாதார அமைச்சினூடான எவ்விதக்ஷநடவடிக்கைகளும் இது வரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை அரசாங்க பொதுச்சேவைகள் சங்கத்தின் தலைவி திருமதி எம்.சுபத்திரா மேலும் மேற்கண்டவாறு தெரிவித்தார்.