ஆனால் தங்களுடைய தொகுதியில் கக்கூசி கட்டுவதற்கு கூட ஆலோசனை கூட்டம் போடுவது என்றாலும் சரிதான், சேவை செய்வதென்றாலும் சரிதான், ஒரு சின்னதொரு கட்டிடத்தை திறப்பது என்றாலும் சரிதான் தலைவர்தான் அதற்கும் வரவேண்டும் என்று நினைப்பதென்பது இவர்களை இவர்களே தாழ்த்திக்கொள்வதற்கு சமமாகும்.
உதாரணத்துக்கு, கல்முனை அபிவிருத்தியை பற்றி தலைவர் ஹக்கீமுக்கு தெறிவதைவிட ஹரீஸ் எம்பி அவர்களுக்குத்தான் நன்றாகவே தெறியும், அவரை சுதந்திரமாக இயங்கவிட்டால் பல அமைச்சர்களை இங்கே கொண்டுவந்து சேவைகளை செய்வார், அதனூடாக பல அபிவிருத்திகளை மக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும்.
ஆனால் இங்கே நடப்பது என்ன?
ஹரீஸ் எம்பியும் மற்ற எம்பிமாரும் ஒரு வபா மாதிரியும், தலைவர்தான் அவருக்கு வழிகாட்டுவது மாதிரியும், சகலதுக்கும் அவர்தான் வரவேண்டும் என்று நினைப்பதும் இந்த ஊர் மக்களுக்கு செய்யும் பெறுத்த அநியாயமாகும்.
ஹரீஸ் எம்பி அவர்களையோ மற்ற எம்பிமாரையோ சுதந்திரமாக இயங்க விட்டால் நிச்சயமாக அவர்களுடைய பதவியை பயன்படுத்தி, பல துறைசார்ந்த அமைச்சர்களை இங்கே அழைத்துவந்து சேவைகளை செய்வார்கள் என்பதே உண்மையாகும். தங்களுடைய அமைச்சிக்குள் மட்டும்தான் அம்பாரை மாவட்டம் முழுக்க சேவை செய்யவேண்டும் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் இருக்கவே முடியாது.
பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களோ அல்லது தலைவர் ஹக்கீம் அவர்களோ தங்களிடமுள்ள அமைச்சிகளினூடாக முழு இலங்கைக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கூறுவது உண்மையாக இருந்தால், ஏன் மற்ற துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களின் சேவை நமக்கு கிடைக்காமல் இருக்கின்றது என்று இந்த மக்கள் யோசித்து பார்த்தார்களா?
ஏன் மற்ற அமைச்சர்கள் இங்கே அழைத்து வரப்படுவதில்லை என்று பார்த்தால், நான் பின்னால் கூறும் காரணம்தான் அதற்கு காரணமாகும்.
தன்னுடைய கட்சியையும், அதன் மூலம் பெற்றுள்ள தலைவர் பதவியையும் காப்பாற்றுவதற்காக அவர் ஆடும் நாடகத்துக்கு நமது பகுதி மக்கள் பழியாகின்றார்கள், இதனை தெறிந்து கொண்டும் நமது எம்பிமார் பேசாமல் இருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.
நிர்வாகம் செய்வதற்கு ஹரீஸ், பைசல் காசிம், மன்சூர் எம்பி போன்றோருக்கு தெறியாத ஒன்றல்ல, அவர்களும் படித்தவர்கள்தான் எப்படி ஹக்கீம் அவர்கள் இந்த கட்சி தலைவராக வருவதற்கு முன் இருந்தாரோ அதைப்போன்றுதான் இவர்களும் அனுபவத்தினூடாக அரசியலை கற்றவர்கள்.
இவர்களை சுயமாக இயங்கவிட்டால் நிச்சயமாக பல அபிவிருத்திகளை நமது பகுதிகளுக்கு கொண்டுவருவார்கள் அதன் மூலம் நமது பகுதிகள் அபிவிருத்தி அடையும் என்பதே உண்மையாகும்.
சரி, இப்படி நடப்பதற்கு காரணம் என்ன என்று பார்த்தால்...தலைவருக்குள் உள்ள பயம்தான் அதற்கு காரணமாகும்.
இந்த கட்சியிலே இருந்த அதாவுள்ளா, ஹிஸ்புள்ளா, ரிசாட், அமீரலி, மறைந்த அன்வர் இஸ்மாயில் போன்றவர்கள் கட்சியில் இருக்கும் போதும் தனது பகுதிகளுக்கு தன்னிச்சையாக இயங்கி பல சேவைகளை செய்தவர்கள், அதன் காரணமாக கட்சியை விட்டு பிரிந்து சென்றாலும், பின்னாலில் அந்தந்த பகுதியை மக்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துக்கொண்டவர்கள் என்பதை நாம் அறிவோம்.
அதே போன்றுதான் ஹரீஸ் அவர்களும் கட்சியை விட்டு விலகி வந்து தேர்தல் கேட்டபோது தோல்வியடைந்தார், அதன் பிற்பாடு முஸ்லிம் காங்கிரஸில் வந்தால்தான் நாம் எம்பியாகலாம் என்று தீர்மானித்து திரும்பவும் கட்சியில் இணைந்து கொண்டதற்கு இதுவே காரணமாகும்.
இப்படியொரு தவறு இனிமேலும் நடக்கக்கூடாது என்ற பயத்தின் காரணமாகவும், கல்முனை தொகுதியும் பறிபோய்விடக்கூடாது என்ற காரணத்தாலும், இவர்கள் யாரும் தன்னிச்சையாக இயங்குவதற்கு தலைவர் அனுமதிப்பதில்லை,
அப்படித்தான் அவர்கள் தன்னிச்சையாக இயங்க முடிவெடுத்து செயல்பட்டால், தொகுதி அபிவிருத்தி அடையும் ஆனால் அவர்களுக்கு அடுத்தமுறை கட்சியில் சீட் கிடைக்காமல் போய்விடும் இதுதான் உண்மையாகும்.
(உதாரணம் முன்னால் மேயர் சிராஸின் பதவி பறிப்பு)
இந்த உள்நோக்கத்தை வைத்துத்தான் தலைவர் அவர்கள் செயல்படுகின்றார் என்பது அம்பாரை மாவட்ட மூன்று தொகுதி எம்பிமாருக்கும் தெறியும், அவர்களுக்கு தொகுதியின் அபிவிருத்தியை விட தலைவரின் மனம் நோகக்கூடாது என்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.
அதற்காகத்தான் கக்கூசி திறப்பதென்றாலும் தலைவர் வரவேண்டும் என்று அவர்கள் துடியாய் துடிக்கின்றார்கள்.
இது அவர்களின் தவறல்ல, மாறாக மக்களின் அறியாமை என்பதே உண்மையாகும். முஸ்லிம் காங்கிரஸில் வந்தால்தான் மக்கள் வோட்டுப் போடுவார்கள் என்ற நிலை இருக்கும் போது அவர்கள் எதனைக் குறிவைப்பார்கள் என்று குழந்தைப் பிள்ளைக்கும் தெறிந்த விடயம்தான்.
தலைவரை மீறி இங்கே செயல்பட்டுவிட்டு இதன் காரணமாக அவர் கட்சியை விட்டு நீக்கிவிட்டால் பிறகு மக்களிடம் வந்தால் தோல்விதான் அவர்களுக்கு மிஞ்சும், அதை விட தலைவரின் மனம் நோகாமல் நடப்பதே மேல் என்று அவர்கள் செயல்படுவது தவறாகாது.
இவர்களுடை இந்த போட்டியினால் பாதிக்கப்படுவது யார்?
என்பதை மக்கள் அறிந்ததாகவும் தெறியவில்லை, அதனால் பாதிக்கப்படுவதும் நாம்தான் என்றும் மக்களுக்கு புரியவில்லை.
ஆகவே மக்களே சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு எம்பியை தெறிவு செய்யுங்கள் நிச்சயமாக பல அபிவிருத்திகள் நமது பகுதியை அலங்கரிக்கும் என்பதே நிச்சயமானதும் சத்தியமானதுமான உண்மையுமாகும் என்பதே எங்கள் கருத்தாகும்.
எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை..