அட்டாளைச்சேனையில் அபிவிருத்தி மழை - அமைச்சர் ஹக்கீம் உட்பட பலர் பங்கேற்பு

ட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் 50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள அவசர விபத்துப் பிரிவுக்கான 3 மாடி கட்டிடத் தொகுதி மற்றும் 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மருத்துவ அதிகாரிகள் விடுதிக் கட்டிடம் என்பவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (27) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கட்டிடங்களுக்கான அடிக்கல்லை நட்டுவைத்தார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அதுகொரல, கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆர்.எம். அன்வர், கட்சி முக்கியஸ்தர்கள், வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -