தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை எப்படி சந்தோஷமாக கொண்டாடலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.. பெருநாளுக்காய் இனிப்புப் பலகாரம்கள் விதவிதமாக செய்துகொண்டிருக்கிறோம்.லேடஸ் டிசைன்களில் ஆண்களும் பெண்களும் வித விதமாக ஆடைகள் தேடிக் கொண்டிருக்கிறோம். பெருநாள் தினத்தில் சுற்றுலா செல்ல திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறோம்...
இந்த நிலையில் நமது இஸ்லாத்தை உள்ளத்தில் சுமந்த ஒரே ஒரு காரணத்தினால் பச்சிளம் குழந்தைகள், வாலிப பெண்கள், வயோதிப உறவுகள் ஆண்கள் பெண்கள் என பாகுபாடு இன்றி சித்தரவதை படுத்தப்படுகிறார்களே..! இவர்களின் வடிந்தோடும் குருதி மேல் நின்று குதுகலமாய் பெருநாள் கொண்டாடும் உள்ளம் கொண்டவர்களா நாங்கள்?
அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள் என்று சொல்லித்தந்த மார்க்கத்தை அல்லவா உள்ளத்தில் சுமந்துள்ளோம்.. அவ்வாறு என்றால் அயல் நாட்டில் நமது முஸ்லிம் உறவுகள் உயிருக்காக இரத்தம் சிந்தி போராடும் போது நாம் எப்படி புத்தாடை அணிந்து இனிப்பு பலகாரம் சுவைத்து பெருநாள் கொண்டாடுவது...
சிந்தியுங்கள் முஸ்லிம் உள்ளங்களே...
நோன்பு நோற்று பிரார்த்தியுங்கள் எங்கள் உறவுகளுக்காய்..
ஜுனைட் எம் பஹத்,
காத்தான்குடி.