மாகாண சபைகளின் கால நீடிப்புக்கு எதிரான கண்டன அறிக்கை..!

20 வது அரசியலமைப்பு திருத்தம் ஒன்றினை மேற்கொண்டு நிறைவடையவுள்ள மாகாண சபைகளின் ஆட்சிகாலங்களை நீடிக்கும் அரசாங்கத்தின் ஜனநாயகத்துக்கு முரணான செயற்hட்டினை எமது அமைப்பானது கடுமையாக எதிர்ப்பதோடு அரசாங்கத்திற்கு எமது கண்டனத்தினையும் தெரிவித்துக்கொள்கிறது.

தேர்தல்கள் மூலம் தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சிக்காலம் முடிவடைந்தால் அவர்கள் புதிய தேர்தலொன்றின் மூலம் மீண்டும் மக்கள் ஆணையினை கோருவதே ஜனநாயகமாகும். அதற்கு மாறாக நிறைவேற்று அதிகாரம் மற்றும் 2/3 முன்றில் இரண்டு பெரும்பான்மை ஆகியவற்றினை பயன்படுத்தி 'பின்கதவுகளை' திறக்கமுற்படுவது ஜனநாயகத்தினை குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நாட்டில் எந்தவொரு தேர்தல்களும் நடைபெறவில்லை. உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படாமையினால் உள்ளுராட்சி மன்றங்களின் செயல்பாடுகள் செயழிளந்துள்ளது. பல பிரதேசங்களில் நிர்வாக சிக்கல்கள் காணப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் இன்மையினால் பல நிர்வாக சீர்கேடுகள் எற்படுகின்றது. ஏன் அரசாங்கம் தேர்தலுக்குப்பயப்பிடுகின்றது, நல்லாட்சி என்ற போர்வையினை போர்த்தி கொண்டு மக்களை முட்டாளாக்குகின்ற இவ்வாறான செயற்பாடுகளை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது.

நாளை 15.08.2012 அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி திர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறிகின்றோம். அரசாங்கம் தேர்தல்களை பிற்போடும் அல்லது ஆட்சிக்காலங்களை அதிகரிக்கும் திர்மானங்களை எடுக்குமேயானால் எமது தேசிய ஒருமைப்பாட்டுக்கான முற்போக்கு பேரவை அதற்கு எதிராக நீதி மன்றம் செல்லும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்தகால செயற்பாடுகளினால் மக்கள் இன்று குழப்பமடைந்துள்ளனர்; கடந்த ஆட்சியாளர்களின் பிழைகளை திருத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கமும் அதே வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது மக்களை ஏமாற்றும் செயற்பாடு. மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி இரு கட்சிகளும் தப்பித்துக் கொள்ளமுடியாது.

13 வது அரசியலமைப்பு திருத்தத்தின் வரப்பிரசாதமே மாகாணசபை அதனது அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதன் மூலம் சிறந்த பயன்களை அடையமுடியும் இந் நிலையில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை பலவீனமாக்க முனைவது எந்தவகையில் நியாயம்.

எனவே இது தொடர்பாக அவசரமாக அரசாங்கம் சிறந்த திர்வொன்றிற்கு வரவேண்டும். உடனடியாக உரிய காலத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும். எந்தவொரு சபைகளுக்குமான ஆட்சிக்காலங்களை நீடிக்க முடியாது. அவ்வாறு நீடிக்கும் தீர்மானங்களை அரசாங்கம் எடுத்தால் அதற்கு எதிராக எமது அமைப்பு போராடும்.
நன்றி.
யு.சு.மபூஸ் அஹமட்,
பிரச்சார செயலாளர்,
'தேசிய ஒருமைப்பாட்டுக்கான முற்போக்கு பேரவை'

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -