முந்த நாள் உண்டதும் நெஞ்சிலே எரியுதா?
நண்பனே! நண்பனே! நண்பனே!
நொந்து போய் நூடில்ஸ் போல் நோஞ்சனாய் விழுகிறாய்
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!
செய்யது பீடி சிகரட் பீடா
இதைத் தவிர வேறெதைக் கண்டாய்
போத்தலோ பையிலே
சுத்தியோ ஆளில்லே
கடற்கரை பார்த்ததும்
ஒதுங்கினாய் மறைவிலே
நித்தமும் வாயிலே
நினைவெல்லாம் போயிலை
ஹறாமெது ஹலால் எது
இல்லையே உன்னிடம்
பள்ளியை மறந்தாய் பாதைகள் மாறினாய்
மடமையும் வந்தது மாவாவும் வந்தது
தூள் என்றும் குடு என்றும்
கசிப்பு என்றும் கஞ்சா என்றும்
நூறு போதை வந்த பின்பு
தேடுகின்றாய் அமைதியெங்கே?
நூறு போதை வந்த பின்பு
தேடுகின்றாய் அமைதியெங்கே?
அமைதி எங்கே?
(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)
அவனவன் நெஞ்சிலே ஆயிரம் போதைகள்
அழுவதும் விழுவதும் போதையின் விளைவுகள்
பெரியவன் சிறியவன்
வல்லவன் கெட்டவன்
உள்ளவன் அனேகம் பேர்
உருள்கிறார் போதையில்.
எண்ணமே சுமைகளாய்
இதயமே காரமாய்
எண்ணமே சுமைகளாய்
இதயமே காரமாய்
தவறுகள் செய்தவன் எவனுமே
தவிக்கிறான் அழுகிறான்